முகப்பு /செய்தி /மதுரை / நாக்கிற்கு பதில் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை... அரசு மருத்துவமனை மீது பரபரப்பு புகார்.. விளக்கம் அளித்த மருத்துவர்!

நாக்கிற்கு பதில் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை... அரசு மருத்துவமனை மீது பரபரப்பு புகார்.. விளக்கம் அளித்த மருத்துவர்!

ராஜாஜி அரசு மருத்துவமனை

ராஜாஜி அரசு மருத்துவமனை

மதுரை அரசு மருத்துவமனையில் ஒருவயது ஆண் குழந்தையின் நாக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக பிறப்புறுப்பில் செய்துள்ளதாக குழந்தையின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தவறுதலாக சிகிச்சை அளித்ததாக பெற்றோர் புகார் தெரிவித்திருந்த நிலையில் தற்போது குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவமனை டீன் ரத்தினவேல் விளக்கம் அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் - கார்த்திகா தம்பதிகளுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தைக்கு மூச்சு குழாயில் சுவாசிப்பு  பிரச்சனை இருந்ததாக மதுரையில் ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கடந்த ஆண்டு நவ.2 ஆம் தேதி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஒரு வருடம் கழித்து குழந்தைக்கு நாக்கில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

பின்னர் நேற்றைய தினம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய முற்படும் பொழுது சிறுநீர்குழாயில் பிரச்னை இருந்ததை கண்டறிந்த மருத்துவர்கள் நாக்கு மற்றும் சிறுநீர் குழாயையும் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

இந்த நிலையில் மருத்துவர்கள் குழந்தைக்கு தவறுதலாக சிகிச்சை அளித்து விட்டதாக பெற்றோர் புகார் தெரிவித்திருந்த நிலையில் அரசு மருத்துவமனை டீன் அறிக்கையின் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார்.

Also see... கோவையில் ஆன்லைனில் வெடி பொருள் வாங்கியவர் கைது...

அதில், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தை தற்போது நலமாக இருப்பதாகவும், உணவருந்தி சாதரணமாக சிறுநீர் கழிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

top videos

    செய்தியாளர்: ஹரிகிருஷ்ணன், மதுரை

    First published:

    Tags: Baby, Govt hospital, Madurai