ஹோம் /நியூஸ் /மதுரை /

Jallikattu 2023 | அடேங்கப்பா..! மதுரை ஜல்லிக்கட்டு போட்டிக்கு இவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளனரா?

Jallikattu 2023 | அடேங்கப்பா..! மதுரை ஜல்லிக்கட்டு போட்டிக்கு இவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளனரா?

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

Jallikattu 2023 : மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான ஆன்லைன் முன்பதிவு வாயிலாக விண்ணப்பித்துள்ளவர்களின் விவரம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் ஜனவரி 15, 16 மற்றும் 17ம் தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடு பிடி வீரர், காளை உரிமையாளர் ஆகியோருக்கான ஆன்லைன் முன்பதிவு சேவை ஜனவரி 10ம் துவங்கி ஜனவரி 12ம் தேதி வரை நடைபெற்றது. இதன் வாயிலாக 9699 காளைகளும், 5,399 மாடு பிடி வீரர்களும் என மொத்தம் 15,098 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.

இவர்களுடைய சான்றிதழ்கள் அனைத்தும் சரி பார்க்கப்பட்டு, தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். டோக்கன் வைத்திருக்கும் மாடு பிடி வீரர்கள், காளைகள் மட்டுமே போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு 4544 மாடுகளுக்கும், 2001 மாடுபிடி வீரர்களும் என மொத்தம் 6545 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்தாண்டு 8,500 நபர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் : வெற்றி - மதுரை

First published:

Tags: Local News, Madurai, Pongal 2023