Home /News /madurai /

அமைச்சர் பிடிஆர் கார் மீது காலணி வீசிய விவகாரம்: ரயில் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது!

அமைச்சர் பிடிஆர் கார் மீது காலணி வீசிய விவகாரம்: ரயில் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது!

ரயில் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது!

ரயில் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது!

நிதியமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசிய விவகாரத்தை கண்டித்து மதுரையில் திமுகவினர் ரயில் இன்ஜின் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலின் போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் நிதியமைச்சர் விமான நிலையத்தில் இருந்து கிளம்பி காரில் சென்று கொண்டிருந்த போது, மதுரை விமான நிலைய வளாகத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார் மீது சிலர் காலணிகள் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சம்பவத்தை கண்டிக்கும் வகையில் பொருட்டு 100க்கும் மேற்பட்ட திமுகவினர் மதுரை ரயில் நிலையத்தில் திடீரென காவல்துறையின் தடுப்புகளை தாண்டி சென்றனர்.

அங்கு ரயில் நிலையத்திற்குள் நுழைந்து திருச்செந்தூர் முதல் பாலக்காடு வரை செல்லக்கூடிய ரயில் இஞ்சின் மீது ஏறி பாஜகவை கண்டித்தும், அண்ணாமலையை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

திமுகவினர் ரயிலில் ஏறி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது ரயில்வே நிலையம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் திமுகவினரிடம் பேச்சுவார்த்தையை தொடர்ந்து ரயிலில் இருந்து கீழே இறங்கினர். தொடர்ந்து, ரயிலின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
Published by:Esakki Raja
First published:

Tags: Minister Palanivel Thiagarajan, Train

அடுத்த செய்தி