Home /News /madurai /

செங்கலை காட்டி வாக்கு கேட்ட திமுக எய்ம்ஸ்-க்காக ஒரு செங்கலை கூட வைக்கவில்லை - ஆர்.பி.உதயக்குமார் குற்றசாட்டு!

செங்கலை காட்டி வாக்கு கேட்ட திமுக எய்ம்ஸ்-க்காக ஒரு செங்கலை கூட வைக்கவில்லை - ஆர்.பி.உதயக்குமார் குற்றசாட்டு!

உதயநிதி ஸ்டாலின், ஆர்.பி.உதயகுமார்

உதயநிதி ஸ்டாலின், ஆர்.பி.உதயகுமார்

”முதல்வர் மதுரை மக்களை உண்மையாக நேசிப்பவராக இருந்தால் வரும் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் மதுரைக்கு செயல்படுத்திய திட்டங்கள் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும்”

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
    எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் செங்கலை காட்டி வாக்கு சேகரித்த திமுக எய்ம்ஸ் மருத்துவமனைக்காக இதுவரை ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின் படி சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய 10 திட்டங்கள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் திருமங்கலம்  தொகுதியின் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

    இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்தவர், செங்கலை காட்டி மக்களிடம் வாக்கு சேகரித்த திமுக தற்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை எனவும் எய்ம்ஸ் பணிகள் கிடப்பில் போட்ட கல்லாக உள்ளது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், “அதிமுக ஆட்சியில் முதியோர் உதவித்தொகை திட்டத்தில், 37 லட்சம்  முதியோருக்கு ரூ. 4300 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டு முறையாக வழங்கப்பட்டது. முதியோர் உதவி தொகையை ரூ. 1500 உயர்த்தி வழங்குவதாக தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்த திமுக தற்பொழுது முதியோர் உதவித்தொகையை ரத்து செய்தது வேதனை அளிக்கிறது.” என கூறினார்.

    மேலும் வாசிக்க: மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

    தொடர்ந்து பேசிய அவர், மதுரை வளர்ச்சிக்காக திமுக அரசு இதுவரை ஒரு பைசா கூட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை, முதல்வர் மதுரை மக்களை உண்மையாக நேசிப்பவராக இருந்தால் வரும் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் மதுரைக்கு செயல்படுத்திய திட்டங்கள் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும் என கூறினார். மேலும் மதுரையில் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் நூலகத்திற்கு பல முறை வருகை புரிந்த முதல்வர் எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை ஒரு முறை கூட பார்வையிடவில்லை என குற்றம்சாட்டினார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Aiims Madurai, Madurai, R.B.Udhayakumar, Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி