தமிழக அரசு பேருந்துகளில் வழங்கப்படும் இலவச பயண சலுகையை பெண்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரேமலதா விஜயகாந்த் விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆம்னி பேருந்து கட்டணத்தால் ஏழை மக்களுக்கு பாதிப்பு இல்லை, வசதியானவர்கள் தான் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க போகின்றனர். என அமைச்சர் கூறுகிறார். இப்படி கூறுவதற்கு எதற்காக ஒரு அமைச்சர்? பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு எளிதில் செல்ல முடியாத அளவிற்கு அரசுப் பேருந்துகள் மிகவும் குறைந்த அளவிலேயே இயக்கப்படுகின்றன.
அரசுப் பேருந்துகள் கிடைக்காதக் காரணத்தால் மக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். அப்படி பயணிக்கும் போது அளவுக்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பேருந்துக்கே அதிகம் செலவழித்துவிட்டார் ஊரில் போய் எப்படி பண்டிகை கொண்டாட முடியும்?
எல்லாமே இங்கு வியாபாரம்தான் என்றால், அரசாங்கமும் வியாபார ரீதியாக நடக்கிறதா? மக்களுக்கான அரசு இது இல்லையா என்ற கேள்வி எழுகிறது. மகளிருக்கான இலவசப் பயணம் குறித்த அமைச்சர் பொன்முடியின் கருத்தை கண்டிக்கிறேன். அதிமுக சார்பில் முதிய பெண்மணியை தூண்டி இலவச பயணத்துக்கு எதிராக பேசி வீடியோ பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அது உண்மையாகவே இருந்தால் நன்றாக இருக்கும்.
இதையும் படிங்க: மின்துறை ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும்: தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை
ஓசியில் பயணம் செய்கிறீர்கள் என ஒரு அமைச்சர் கூறுகிறார். பெண்களுக்கு மாத உதவி தொகை வழங்க சில்லறை மாற்றிக்கொண்டு இருக்கிறோம் என்று மற்றொரு அமைச்சர் சொல்கிறார். இதையெல்லாம் மக்கள் உணர வேண்டும். தமிழக அரசு பேருந்துகளில் வழங்கப்படும் இலவச பயண சலுகையை தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் புறக்கணிக்க வேண்டும்’ என்று பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bus, DMDK, Premalatha Vijayakanth