ஹோம் /நியூஸ் /மதுரை /

மதுரையில் களைகட்ட தொடங்கிய தீபாவளி பஜார்..!

மதுரையில் களைகட்ட தொடங்கிய தீபாவளி பஜார்..!

மதுரை தீபாவளி பஜார்

மதுரை தீபாவளி பஜார்

Madurai | சரஸ்வதி பூஜை , விஜயதசமி தொடர் விடுமுறை என்பதால்  மதுரையில்  விளக்கு தூண்,  தெற்குமாசி வீதிகளில் தீபாவளி பஜார் களை கட்ட தொடங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

அக்டோபர் 24 ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் மதுரையில் விளக்கு தூண் மற்றும் மாசி வீதிகளில்  தீபாவளி பஜார் விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது.

மதுரை தீபாவளி பஜாரில் புத்தாடை மட்டுமல்ல , தலையணை,  தரைவிரிப்புகள் மிதியடி,  பனியன் , வேட்டி , போர்வை சிறுவர்களுக்கான ஆடைகள்,  குடை மற்றும் பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான வீட்டுக்கு தேவையான பொருட்களும் கிடைக்கிறது.

இதனால் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள்  குடும்பத்துடன் வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். சரஸ்வதி பூஜை , விஜயதசமி தொடர் விடுமுறை என்பதால்  நேற்று (புதன்கிழமை)  மதுரையில்  விளக்கு தூண்,  தெற்குமாசி வீதிகளில் தீபாவளி பஜார் களை கட்ட தொடங்கியுள்ளது.

Also see... செங்கல்பட்டில் தசரா திருவிழா கொண்டாட்டம்.. அலங்காரங்களுடன் ஊர்வலம் வந்த சாமிகள்..

தொடர் விடுமுறை  யொட்டி மக்கள் தீபாவளி புத்தாடை  உள்ளிட்ட பொருட்களை வாங்க வந்த வண்ணம் உள்ளனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Diwali festival, Madurai, Shopping malls