ஹோம் /நியூஸ் /Madurai /

Madurai | நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களைக் கண்டறிய நவீன கேமராக்கள்

Madurai | நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களைக் கண்டறிய நவீன கேமராக்கள்

நெடுஞ்சாலை சிசிடிவி

நெடுஞ்சாலை சிசிடிவி

Madurai | திருமங்கலம்- திண்டுக்கல் நான்கு வழி சாலையில் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களின் வேகத்தை கண்டறியும் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சாலைப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதிலும், விதிமுறைகளை மீறுபவர்களைக் கண்டறிவதிலும் சி.சி.டி.விகளின் பங்களிப்பு தற்போது இன்றியமையாததாக இருந்துவருகிறது. விதிகளை மீறி பயணிப்பவர்களை தானியங்கி கேமராக்கள் தானாகவே அடையாளம் காணும் தொழில்நுட்பமும் தற்போது உள்ளது.

அதன் நீட்சியாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் வடிவேல்கரை பேருந்து நிறுத்தம் அருகேயும் மதுரையிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் வாகனங்களையும், திருமங்கலம் வழியாக விருதுநகர் செல்லும் வாகனங்களின் வேகத்தைக் கண்காணிக்க சாலை நடுவே தூண்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் அவ்வழியாக வரும் வாகனங்கள் வேகத்தை கட்டுபடுத்த கூறி டிஜிட்டல் பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

சோதனை முயற்சியாக நேற்று திருமங்கலம் கப்பலூர் காலனி பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள வேக கட்டுப்பாடு கேமராக்கள் இயக்கப்பட்டன. இந்த சாலையில் வந்த வாகனங்களை 100 மீட்டர் தூரத்திலேயே கேமராக்கள் ஸ்கேன் செய்து டிஸ்ப்ளே பதாகையில் வேகத்தை காட்டின.

மணிக்கு 80 கி.மீ வேகம் வரை பச்சை நிறத்திலும் அதற்கு மேல் செல்லும் வாகனத்தின் வேகத்தை சிவப்பு நிறத்திலும் கான்பித்தன. இதுகுறித்து சுங்க அதிகாரி ஒருவரிடம் கேட்ட பொழுது, ‘வேகத்தை கணக்கிடும் கருவிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நேற்று சோதனை நடத்தப்பட்ட கேமரா சோதனை முயற்சி வெற்றிகரமாக அமைந்தது. இந்த கேமராக்கள் மூலம் அதிவேக வாகனங்களை கண்டறிந்து எச்சரிக்க வேண்டுமா அல்லது அபராதம் விதிக வேண்டுமா என்பதை அரசு முடிவு செய்யும் என்றார்.

செய்தியாளர்: அருன் பிரசாந்த், மதுரை.

First published:

Tags: Local News, Madurai