ஹோம் /நியூஸ் /மதுரை /

விளம்பரத்துக்காக பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தால் கடும் நடவடிக்கை.. அஸ்ரா கார்க்

விளம்பரத்துக்காக பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தால் கடும் நடவடிக்கை.. அஸ்ரா கார்க்

அஸ்ரா கார்க்

அஸ்ரா கார்க்

மேற்கொண்டு எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் நகரின் முக்கிய பகுதிகளில் அமைதி கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது என கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

திண்டுக்கல் குடைப்பாறைபட்டியில் பால்ராஜ்  என்பவருக்கு சொந்தமான வாகன கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்த வழக்கில், பேகம்பூரைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவரை கைது செய்து விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்தார்.

திண்டுக்கல் குடைப்பாறைபட்டியில் பால்ராஜ்  என்பவருக்கு சொந்தமான PVT CONSULTING அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 இருசக்கர வாகனம் மற்றும் ஒரு கார், சனிக்கிழமை அதிகாலையில் தீ வைத்து எரிக்கப்பட்டது.

இது தொடர்பாக திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில்   பால்ராஜ் புகார் கொடுத்தார். இதனையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இதனையடுத்து வாகனங்களுக்கு தீ வைத்ததாக பேகம்பூரைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த  தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், தென்மாவட்டங்களில் அசம்பாவிதங்கள் ஏதேனும் நிகழாமல் இருக்க 20,000 போலீசார் தொடர்ந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை பட்டியலிட்டு அவ்விடங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இதையும் வாசிக்க: குண்டுவெடிப்பு சம்பவங்கள்.. பாஜகவினர் மீது சந்தேகம் கிளப்பும் சீமான்

மேற்கொண்டு எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் நகரின் முக்கிய பகுதிகளில் அமைதி கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது என கூறினார்.

மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேவைப்படும் பட்சத்தில் அவர்கள், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரித்தார். இதேபோல், விளம்பரத்திற்காக தனக்கு தானே பெட்ரோல் குண்டு வீசிக்கொண்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Published by:Siddharthan Ashokan
First published:

Tags: BJP cadre, Dindigal, Madurai, Petrol