முகப்பு /செய்தி /மதுரை / “150 ஆடுகள், 300 கோழிகள்..” பிரசாதமாக வழங்கப்பட்ட பிரியாணி.. போட்டிபோட்டு வாங்கிச் சென்ற பக்தர்கள்..!

“150 ஆடுகள், 300 கோழிகள்..” பிரசாதமாக வழங்கப்பட்ட பிரியாணி.. போட்டிபோட்டு வாங்கிச் சென்ற பக்தர்கள்..!

பிரியாணி திருவிழா

பிரியாணி திருவிழா

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழாவில் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

திருமங்கலம் அருகே வடக்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முனியாண்டி சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம், பிரியாணி திருவிழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு 88வது ஆண்டு பிரியாணி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவையொட்டி விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

தொடர்ந்து பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகள் பலியிடப்பட்டன. அதன் பிறகு அசைவ பிரியாணி தயார்செய்து கருப்பசாமிக்குப் படைக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பக்தர்களுக்குப் பிரியாணி வழங்கப்பட்டது. இரவு முதல் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் பிரியாணியைப் போட்டிப் போட்டுக்கொண்டு வாங்கி சென்றனர்.

First published:

Tags: Biryani, Madurai, Temple