ஹோம் /நியூஸ் /மதுரை /

டூ விலர் நோ.. வாகனத்தின் மேல் பயணிக்கக் கூடாது- தேவர் ஜெயந்தி, மருது பாண்டியர்கள் நினைவு நாள் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

டூ விலர் நோ.. வாகனத்தின் மேல் பயணிக்கக் கூடாது- தேவர் ஜெயந்தி, மருது பாண்டியர்கள் நினைவு நாள் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

photo courtesy - Google

photo courtesy - Google

Devar Jayanthi | வாகனங்களில் மது பாட்டில்கள் எடுத்து செல்வது, வாகனங்களின் கூரை மேல் பயணம் செய்வது போன்றவைகள் தடை செய்யப்பட்டுள்ளன. வாகனத்தில் ஆயுதங்கள் ஏதும் எடுத்து செல்லக்கூடாது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Madurai, India

  தேவர் ஜெயந்தி மற்றும் மருது பாண்டியர்களின் நினைவு நாள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  வெளியிட்டுள்ளது.

  இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மதுரை மாவட்டத்தில் வரும் 27.10.2022 மற்றும் 30.10.2022 ஆகிய நாட்களில் மருதுபாண்டியர்கள் நினைவு நாள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு அவர்களது திருவுருவ சிலைகளுக்கு மரியாதை செலுத்துவதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

  முன் அனுமதி பெற பதிவு பெற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் அரசு அறிவித்த வழிமுறைகளை பின்பற்றி மாலை அணிவித்து மரியாதை செய்யவேண்டும்.

  இதையும் படிங்க : ஊர்ந்து சென்று பதவியை பெற்றது யார் என்று ஊருக்கே தெரியும் - ஓபிஎஸ் விமர்சனம்

  இருசக்கர வாகனங்கள், டிராக்டர், ஆட்டோ, டாடா ஏசிஇ போன்ற வாகனங்கள் மூலமாகவோ சைக்கிள் மற்றும் திறந்தவெளி வாகனங்களில் பயணம் செய்யவோ, நடைபயணமாகவோ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி கிடையாது.

  சொந்த நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் முன் அனுமதி பெற்று (vehicle pass) பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு முன் அனுமதி பெறும்போது வாகனத்தின் RC மற்றும் வாகன ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

  சொந்த வாகனங்களில் வருவோர் வாகனத்தின் உரிமையாளர் பெயர், அதில் பயணம் செய்பவர்கள், வாகனத்தின் பதிவு எண், அதன் ஓட்டுநர் போன்ற விவரங்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் முன்கூட்டியே தகவல் தெரிவித்து அங்கே தரப்படும் அனுமதி சீட்டினை வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும்.

  வாகனங்களில் மது பாட்டில்கள் எடுத்து செல்வது, வாகனங்களின் கூரை மேல் பயணம் செய்வது போன்றவைகள் தடை செய்யப்பட்டுள்ளன. வாகனத்தில் ஆயுதங்கள் ஏதும் எடுத்து செல்லக்கூடாது. வழித்தடங்களில் வெடி போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

  இதையும் படிங்க : மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் குறித்த தகவல் இல்லை : ஆர்டிஐ கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை பதில்

  பொது இடங்களில் திருவுருவ படங்களை வைத்து அஞ்சலி செலுத்த அனுமதி கிடையாது. பொதுகூட்டம் மற்றும் இதர நிகழ்ச்சிகளுக்கு காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். கடந்த 2019ம் ஆண்டு வழங்கப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். வெடி வெடித்தல், கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கும்  அனுமதி இல்லை.

  அனுமதி பெறப்படாத வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. பொதுமக்களின் நலன் கருதி அரசு அறிவித்துள்ள வழிகாட்டு  நடைமுறைகளை பின்பற்றி தலைவர்களுக்கு மரியாதை செலுத்து வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Karthi K
  First published:

  Tags: Devar Jayanthi, Madurai