ஹோம் /நியூஸ் /மதுரை /

“தேவர் தங்க கவசத்தை இபிஎஸ்ஸிடம் வழங்க கூடாது” - நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு கடும் எதிர்ப்பு

“தேவர் தங்க கவசத்தை இபிஎஸ்ஸிடம் வழங்க கூடாது” - நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு கடும் எதிர்ப்பு

ஓ.பன்னீர்செல்வம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

ஓ.பன்னீர்செல்வம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

Devar Jayanthi gold shield | பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் வழங்க கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Madurai, India

  பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் வழங்க கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் .பன்னீர்செல்வம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ம் தேதி நடைபெறுகிறது. அந்த நாளில் தென் மாவட்டங்களில் உள்ள தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவார்கள்.

  கடந்த 2014ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு 13 கிலோ எடையுள்ள தங்க கீரிடம் மற்றும் கவசத்தை வழங்கினார். அதிமுக சார்பில் வழங்கப்பட்ட 13 கிலோ தங்க கவசத்தை தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தங்களிடம் தான் வழங்க வேண்டும் என்று  எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

  இதையும் படிங்க : அனுமதியின்றி இனிப்பு, கார வகைகளை விற்கக்கூடாது - மதுரையில் எச்சரிக்கை

  இந்நிலையில், இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற விசாரணையில், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டதால், தங்களிடமே தங்க கவசத்தை ஒப்படைக்க வேண்டும் என அவர் தரப்பில் வாதிடப்பட்டது.

  ஆனால்,  அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இபிஎஸ் தரப்பிடம் தங்க கவசத்தை கொடுக்க கூடாது என ஓபிஎஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

  இதையும் படிங்க : மதுரை மாநகரில் இத்தனை ஹிட் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதா...!

  மேலும், இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை பின்பற்ற தயாராக இருப்பதாக முத்துராமலிங்க தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் தரப்பிலும், கவசத்தை பாதுகாக்கும் வங்கி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இவற்றை பதிவு செய்த நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து  உத்தரவிட்டார்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Devar Jayanthi, EPS, Madurai, Madurai High Court, OPS