ஹோம் /நியூஸ் /மதுரை /

தேவர் தங்க கவசத்தை டிஆர்ஓவிடம் ஒப்படைக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு

தேவர் தங்க கவசத்தை டிஆர்ஓவிடம் ஒப்படைக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு

உயர்நீதிமன்ற மதுரை கிளை

உயர்நீதிமன்ற மதுரை கிளை

Devar Gold shield Case | இந்த வழக்கின் தீர்ப்பை பிற்பகல் 4 மணிக்கு ஒத்தி வைத்து நீதிபதி பவானி சுப்பராயன் உத்தரவிட்டிருந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் தங்க கவசத்தை மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.

தேவர் தங்க கவச விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் வாதங்கள் வருமாறு.

ஓபிஎஸ் தரப்பு வாதம் :

தற்போதைய நிலைப்படி பொருளாளர் வழக்கு தொடர முகாந்திரம் இல்லை. இடைக்கால பொது செயலாளரால்  பொருளாளரை நியமிக்க விதிகளின்படி  அதிகாரம் கிடையாது.

அதிமுக விதிகளின்படி பொருளாளரை நியமிக்கும் அதிகாரம் இடைக்கால பொது செயலாளருக்கு கிடையாது. ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளது.

வழக்கம்போல் எங்களிடம் கொடுங்கள் அல்லது  பிரச்சனை ஏற்பட்டால் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைக்கலாம் என நாங்களே வங்கிக்கு கடிதம் எழுதி உள்ளோம் என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

இபிஎஸ் தரப்பு வாதம் :

ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளது. ஆனால்,  உச்சநீதிமன்ற எந்த தடையும் விதிக்கவில்லை. பொருளாளர்,  உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு,  ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டார். பொது செயலாளர் பதவிக்கு தான் தேர்தல் நடத்த மாட்டோம் என கூறினோம். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க வில்லை.

இந்த சூழலில், எங்கள் புதிய பதவிக்கு எந்த பிரச்சனையும் எழவில்லை. திண்டுக்கல் சீனிவாசன்  அதிமுகவின் மற்ற வங்கி கணக்குகளை நிர்வகித்து வருகின்றனர். தனி நபருக்கான ஒப்பந்தம் இல்லை. எனவே எங்களுக்கே உரிமை உள்ளது, என வாதிடப்பட்டது.

இதையும் படிங்க : டூ விலர் நோ.. வாகனத்தின் மேல் பயணிக்கக் கூடாது- தேவர் ஜெயந்தி, மருது பாண்டியர்கள் நினைவு நாள் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை பிற்பகல் 4 மணிக்கு ஒத்தி வைத்து நீதிபதி பவானி சுப்பராயன் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் தங்க கவசத்தை  இரு தரப்பிடமும் தர மறுத்துவிட்டார். மேலும், ராமநாதபுரம்  மாவட்ட வருவாய் அலுவலரிடம்  கவசத்தை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Published by:Karthi K
First published:

Tags: Devar Jayanthi, EPS, High court, Madurai, OPS