முகப்பு /செய்தி /மதுரை / சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..

சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..

அரசியல் விமர்சகரும், சவுக்கு இணையதளத்தை நடத்தி வருபவருமான பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மதுரையை சேர்ந்த யூடியூபர் மாரிதாஸ், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. இதில், இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், யூடியூபர் சவுக்கு சங்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார். அதில், மாரிதாஸ் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து ஒரு அவதூறு கருத்தை பதிவிட்டிருந்தார்.

அதில், சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பதிவில், “அய்யா எதுவா இருந்தாலும் என் கிட்டயே கேக்கலாம். கோர்ட்டில் பேச வேண்டாம்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இது நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து நீதிபதி குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்ட,  யூடியூபர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்குப்பதிவு செய்யக்கோரி மதுரைக்கிளை  பதிவாளருக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளார்.

இதையடுத்து, விரைவில், யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கு விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

First published:

Tags: Madurai, Madurai High Court, Savukku Shankar