Home /News /madurai /

மதுரையில் இன்ஸ்டாகிராமில் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள்..

மதுரையில் இன்ஸ்டாகிராமில் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள்..

கஞ்சா விற்று கைதான மாணவர்கள்

கஞ்சா விற்று கைதான மாணவர்கள்

Madurai District | மதுரையில் இன்ஸ்டாகிராமில் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா, செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலையில் உள்ள இரு தனியார் கல்லூரிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு கஞ்சா விற்பனை படுஜோராக நடைபெற்று வருவதாகவும், மாநகரின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வைத்து கஞ்சா பொட்டலங்களை மாணவர்களுக்கு சப்ளை செய்வதாகவும் மாநகர காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தல்லாகுளம் காவல் ஆணையர் சுரேஷ்குமார், ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைத்து கண்காணித்தனர்.

அதன்மூலம், மதுரை ஜம்புரோபுரம் மார்க்கெட் பகுதியில் உள்ள மாணவர்கள் சிலர் இன்ஸ்டாகிராம் வாயிலாக சக மாணவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வந்தததை கண்டறிந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், இன்ஸ்டாகிராம் வழியாக லொக்கேஷன் (Map location) வசதியை பயன்படுத்தி வெவ்வேறு இடங்களுக்கு  வரவழைத்து சக மாணவர்களுக்கு கஞ்சாவை சிறிய பொட்டலங்களாக 50 ரூபாய், 100 ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.

இந்த குற்றத்தில் தொடர்புடைய கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ மகன் கிஷோர், தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகன் மணிகண்டன், அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பொட்டலங்கள், இருசக்கர வாகனம் மற்றும் 3 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Also see... காவலரின் முறுக்கு மீசையை வெட்டச் சொன்ன நீதிபதி!

போலீசில் பிடிபட்ட மூன்று மாணவர்களும் கல்லூரி இறுதியாண்டு,  இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் சக மாணவர்களுக்கு இன்ஸ்டா, ஃபேஸ்புக் மூலம் விற்பனை செய்வதால் எளிதில் போன் நம்பர் யாருக்கும் தெரியாது. எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்பதால் இப்படி விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளனர். மூன்று பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Cannabis, Instagram, Madurai, Students

அடுத்த செய்தி