Home /News /madurai /

கோப்ரா பட விழாவில் தள்ளுமுள்ளு.. மதுரையில் கட்டுக்கடங்காமல் திரண்ட ரசிகர்கள்.. மயங்கி விழுந்த மாணவர்கள்!

கோப்ரா பட விழாவில் தள்ளுமுள்ளு.. மதுரையில் கட்டுக்கடங்காமல் திரண்ட ரசிகர்கள்.. மயங்கி விழுந்த மாணவர்கள்!

கோப்ரா பட விழாவில் தள்ளுமுள்ளு.

கோப்ரா பட விழாவில் தள்ளுமுள்ளு.

ஒரு கல்லூரி வளாகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்புடன் சினிமா படத்திற்கான விளம்பர நிகழ்வை ஏற்பாடு செய்தது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரையில் நடைபெற்ற கோப்ரா பட புரொமோஷன் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி மாணவர்கள் பலர் மயங்கி விழுந்த நிலையில், ஆம்புலன்ஸ் வர வழியில்லாததால் சக மாணவர்களே கைகளில் தூக்கி சென்றனர்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகவுள்ள "கோப்ரா" படத்தின் புரொமோஷன் விழா நடைபெற்றது. விழாவில் நடிகைகள் ஶ்ரீநிதி ஷெட்டி, மிர்னாளினி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய நடிகர் விக்ரம்,"மதுரைக்கு வந்ததும் கைகள் தானாக மீசையை முறுக்கிக் கொள்கின்றன. இதற்கு காரணம் மதுரையின் தண்ணீரா, அல்லது மக்களின் இதயமா என தெரியவில்லை.நான் பரமக்குடியை சேர்ந்தவன். ஆனால், என் தந்தை பயின்றது அமெரிக்கன் கல்லூரி தான். மதுரையில் என்னுடைய உறவினர் வீடுகளில் வந்து தங்கி விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழித்திருக்கிறேன்.என்னுடைய நண்பர்கள் பாலா உள்ளிட்டோர் இந்த கல்லூரியில் படித்திருக்கிறார்கள். எனவே மதுரை எனக்கு நெருக்கமான ஒரு ஊர்.

cobra promotion in madurai vikram srinidhi shetty
கோப்ரா பட விழா


மதுரை என்றாலே ருசியாக சாப்பிடலாம், கொண்டாட்டமாக இருக்கலாம் என்பது தான் என்னுடைய ஆசை. இன்று தான் முதல் முறையாக ஜிகர்தண்டா சாப்பிட்டேன், செம்மையாக இருந்தது.மதுரை மக்களிடம் வரவேற்பு மிகப்பெரியதாக இருக்கும் என கேள்விப்பட்டேன். ஆனால், உண்மையில் வரவேற்பு "அதற்கும் மேல்" இருக்கிறது" என்றார்.

Cobra: விக்ரமின் கோப்ரா திரைப்படத்திற்கு UA சான்றிதழ் வழங்க தணிக்கைக் குழு மறுப்பு

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய விக்ரம்,
"சினிமாவில் சாதிப்பது மிக மிக கடினம். நானே சாதிப்பதற்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக கடும் உழைப்பு தேவைப்பட்டது. ஆனால், உங்களுக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவு இருந்தால் அதை விடாமல் முயற்சி செய்யுங்கள் ஒருநாள் ஜெயிப்பீர்கள்" என தெரிவித்தார்.

cobra promotion in madurai vikram srinidhi shetty
கோப்ரா பட விழா


இந்த விழாவில் பங்கேற்க மாலை 4 மணி முதலே கல்லூரி மாணவ, மாணவிகள் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தனர். விழாவை சுமூகமாக நடத்துவதற்கான  போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மாணவர்களை கட்டுப்படுத்த தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகம் மேற்கொள்ள தவறியதால் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

அதில் உண்மையில்லை... த்ரிஷா குறித்த வதந்திக்கு அவரது தாயார் முற்றுப்புள்ளி

கூட்ட நெரிசலில் சிக்கி மாணவ, மாணவிகள் பலர் மயங்கி விழுந்தனர். இதில் முற்றிலும் சுயநினைவு இழந்த நிலையில் கூட்டத்தில் கிடந்த மாணவர் ஒருவரை சக மாணவர்கள் கைகளில் தூக்கி கொண்டு சாலையில் ஓடினர். கோரிப்பாளையம் சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆம்புலன்ஸ் வர வழி இல்லாத காரணத்தால் ஆட்டோ ஒன்றில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

cobra promotion in madurai vikram srinidhi shetty
மயங்கி விழுந்த மாணவன்


ஆயிரக்கணக்கான மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் கோரிப்பாளையம் சாலையில் திரண்டு சென்றதாலும், மாணவர்கள் சிலர் சாலையின் குறுக்கே நின்று ஆடி, ஓடியதாலும் அரை மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

cobra promotion in madurai vikram srinidhi shetty
கீழே கிடந்த சேர்கள்


ஒரு கல்லூரி வளாகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்புடன் சினிமா படத்திற்கான விளம்பர நிகழ்வை ஏற்பாடு செய்தது மக்கள் மத்தியில் ஒருபுறம் அதிருப்தியையும், அதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் கோட்டை விட்டது கடும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளன.

கோப்ரா படத்திற்கான ப்ரமோஷன் வேலைகள் துவங்கிய முதல் நாளே திருச்சி மற்றும் மதுரையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்திருப்பது படக்குழுவின் கவனக்குறைவுக்கு சான்றாயிருக்கிறது. இனியாவது தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை படக்குழுவும், காவல்துறையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Actor Vikram, Cobra Movie, Madurai

அடுத்த செய்தி