ஹோம் /நியூஸ் /மதுரை /

கிறிஸ்துமஸ் பண்டிகை : கிடுகிடுவென விலை உயர்ந்த மதுரை மல்லி

கிறிஸ்துமஸ் பண்டிகை : கிடுகிடுவென விலை உயர்ந்த மதுரை மல்லி

மதுரை மல்லி

மதுரை மல்லி

Madurai District News : கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு இன்று மதுரை மல்லி ரூபாய் 2500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை என்றாலே மதுரை மல்லிகை பூ தான். இப்பூச்சந்தை மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் அமைந்துள்ளது. அண்டை மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் விளையும் மல்லியே மதுரை மல்லி ஆகும். மதுரை மல்லிகை வாங்குவதற்கு எனவே ஒரு மக்கள் கூட்டம் எப்பொழுதும் உண்டு.

இச்சந்தையில் மதுரை மல்லி மட்டுமின்றி திண்டுக்கல், கொடைக்கானல், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூக்களும் மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் மற்றும் சுப முகூர்த்த தினங்களில் பூக்களின் விலை உயர்வது வழக்கம்.

இந்நிலையில், நாளை கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு மதுரை மல்லிகை இன்று ரூபாய் 2500க்கு

பிச்சி, முல்லைப் பூ 1200க்கும், கனகாம்பரம் 600கும், அரளி, சம்பங்கி 200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதர பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

செய்தியாளர் : யுவதிகா - மதுரை

First published:

Tags: Local News, Madurai