முகப்பு /செய்தி /மதுரை / கிறிஸ்துமஸ் திருநாள்... மதுரை விளாச்சேரி பகுதியில் தயாராக உள்ள குடில் பொம்மைகள்.. 

கிறிஸ்துமஸ் திருநாள்... மதுரை விளாச்சேரி பகுதியில் தயாராக உள்ள குடில் பொம்மைகள்.. 

கிறிஸ்துமஸ்க்கு தயாராகும் பொம்மைகள்

கிறிஸ்துமஸ்க்கு தயாராகும் பொம்மைகள்

Madurai District News : கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக விளாச்சேரி பகுதியில் குடில் தயாராக உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

சாதாரண களிமண் அல்லது சுண்ணாம்பு போன்றவைகளால் செய்யப்படும் பொம்மைகளை உயிரோட்டம் உள்ளவையாக வியக்க வைக்க செய்வதே கைவினை கலைஞர்களின் படைப்புகள் ஆகும்.

ஆம் அப்படிப்பட்ட கைவினைக் கலைஞர்களின் கூடாரமாக விளங்கக்கூடிய விளாச்சேரி மதுரையிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இப்பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரின் மையப்பகுதியில் எங்கு பார்த்தாலும் இவர்களின் கைவினை படைப்புகள் தான். வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து கூட இங்கு வந்து தான் பொம்மைகளை வாங்கி செல்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் விழா காலங்களுக்கு ஏற்ப கொழு பொம்மைகள் முதற்கொண்டு விநாயகர், கிருஷ்ணன் போன்ற குடில் பொம்மைகள் வரை இங்கு சீசனுக்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது.

இதையும் படிங்க : சென்னை - திருநெல்வேலி இடையே பண்டிகை கால சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

இந்நிலையில், இந்த ஆண்டு வரும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு குடில் பொம்மைகள் தயாரிக்கும் பணியில் பொம்மை தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கிறிஸ்துமஸ்க்கு தயாராகும் பொம்மைகள்

இதுகுறித்து கைவினை கலைஞர் ராம்குமாரிடம் கேட்டபோது, “நாங்கள் பரம்பரை பரம்பரையாக இத்தொழிலை செய்து வருகிறோம். இத்தொழில்தான் எங்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. பலவகையான பொம்மைகளை செய்து கொண்டு வருகிறோம். கிறிஸ்மஸ் நெருங்கும் தினத்தையும் முன்னிட்டு குடில் செய்வதில் ஈடுபட்டு வருகிறோம்.

முதலில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், காகித கூழ், சுண்ணாம்பு, சிமெண்ட் ஆகியவற்றை கொண்டு மோல்ட் மூலம் பொம்மைகளை செய்கிறோம். பின்பு பொம்மைகளில் உள்ள சிறு துளைகளை அடைத்து நீரினுள் மூழ்கி உலர வைத்த பின்பு கிக்கோ கார் பெயிண்ட் மூலம் பொம்மைகளுக்கு கலர் கலரான வண்ணங்களை தீட்டுகிறோம்.

கிறிஸ்துமஸ்க்கு தயாராகும் பொம்மைகள்

ஒரு இன்ச் முதல் 10 அடி வரை என 18 செட்டுகளைக் கொண்டு குடில்களை செய்து வருகிறோம். ஒவ்வொரு செட்டுகளிலும் ஜீசஸ், மாதா, சூசையப்பர்,மூன்று ராஜாக்கள்,ஆடு மேய்ப்பவர்கள், ஒட்டகம்,மாடு என 18 பொம்மைகள் இருக்கும். ஒரு இன்ச் முதற்கொண்டு 2அடி வரை காகிதம் கூலினாலும் மூன்றிலிருந்து பத்து அடி உள்ள பொம்மைகள் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலமாகவும் தயாரிக்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த பொம்மைகள் நாகர்கோவில், எர்ணாகுளம்,கேரளா, வேளாங்கண்ணி போன்ற இடங்களுக்கு அனுப்பப்பட உள்ளது.

ஒரு இன்ச் கொண்ட குடில் பொம்மைகள் 650 இல் இருந்து 10 அடி கொண்ட பொம்மைகள் 6000 வரை விற்கப்படுகிறது.

செய்தியாளர் : யுவதிகா - மதுரை

First published:

Tags: Local News, Madurai