ஹோம் /நியூஸ் /Madurai /

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டப புனரமைப்பு பணி - முதலமைச்சர் இன்று துவக்கி வைக்கிறார்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டப புனரமைப்பு பணி - முதலமைச்சர் இன்று துவக்கி வைக்கிறார்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

Madurai : வீர வசந்தராயர் மண்டப புனரமைப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று துவக்கி வைக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வீர வசந்தராயர் மண்டபத்தின் சீரமைப்பு பணிகளை இன்று காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் கடந்து 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ல் தீ விபத்து ஏற்பட்டு மண்டபம் முழுவதும் சேதமடைந்தது.விபத்து ஏற்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் சீரமைப்பு பணிக்கான டெண்டர் மீண்டும் மீண்டும் கோரப்பட்டும் இறுதி செய்யப்படாமல் இருந்ததால் கால தாமதமாகி வந்தது.

அதேநேரம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள களரம்பள்ளி மலையடிவாரத்தில் இருந்து மண்டபத்திற்கு தேவையான கற்களை வெட்டி எடுக்க 6.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு மதுரையில் கோவிலுக்கு சொந்தமான செங்குளம் எனும் இடத்தில் வைக்கப்பட்டு உள்ளன. மேலும், மண்டபத்தின் வடிவமைப்பு பணிகளுக்கு 11.70 கோடி ரூபாயும் நிதியாக ஒதுக்கப்பட்டு உள்ளன.

இறுதியாக திருப்பூரை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி உத்தரவையும் கடந்த ஏப்ரல் மாதம் கோவில் நிர்வாகம் வழங்கியுள்ளது. வீர வசந்தராயர் மண்டபத்தின் சீரமைப்பு பணிகள் தாமதமான காரணத்தினால் கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய கோவில் குடமுழுக்கு பணிகளும் நடைபெறாமல் இருந்தன. தற்போது சீரமைப்பு பணிக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2 ஆண்டுகளுக்குள் குடமுழுக்கு நடத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்ததன் அடிப்படையில் குடமுழுக்கு திருப்பணிகளுக்காக 25 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், வீர வசந்தராயர் மண்டப புனரமைப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று காலை 11 மணிக்கு துவக்கி வைக்க உள்ளார்.

இதனை தொடர்ந்து புனரமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு ஓராண்டுக்குள் முடித்து, குடமுழுக்கு பணிகளை துவங்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Published by:Ramprasath H
First published:

Tags: Madurai, MK Stalin, Tamil Nadu, Tamil News, Temple