ஹோம் /நியூஸ் /மதுரை /

சென்னை - திருநெல்வேலி இடையே பண்டிகை கால சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை - திருநெல்வேலி இடையே பண்டிகை கால சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சென்னை - திருநெல்வேலி இடையே பண்டிகை கால சிறப்பு ரயில் இயக்குவது குறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில் மதுரை தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கம். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்துள்ளது.

தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் தாம்பரத்திலிருந்து டிசம்பர் 22 நாளை இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரயில் (06022) டிசம்பர் 23 வெள்ளிக்கிழமை அன்று மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

இந்த ரயில்கள் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியுடன் கூடிய ஒரு சரக்கு பெட்டி ஆகியவை இணைக்கப்படும்‌ என மதுரை தெற்கு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

செய்தியாளர்: யுவதிகா, மதுரை.

First published:

Tags: Local News, Madurai