தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 12,000 ரூபாய் நிதி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளதும், 2016-18 ஆகிய இரண்டாண்டுகளில் ஒரு ரூபாய் கூட ஒதுக்காததும் தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) மூலம் அம்பலமாகியுள்ளது.
2011-12 நிதியாண்டு முதல் 2021-22 நிதியாண்டு வரையிலான 10 ஆண்டுகளுக்கு தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி விபரங்கள் குறித்து மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கேட்டிருந்தார்.
அதற்கு கிடைக்கப்பெற்ற பதிலில், 2011-12 முதல் 2015-16 வரையிலான 5 நிதி ஆண்டுகளில் மொத்தம் ரூ.172 கோடியே 43 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2016-17 மற்றும் 2017-18 ஆகிய நிதியாண்டுகளில் நிதி எதுவும் ஒதுக்கவில்லை என்பதும், 2018-19 முதல் 2021-22 வரையிலான 4 நிதி ஆண்டுகளில் தலா ரூ.3000 வீதம் மொத்தம் வெறும் ரூ.12,000 மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
நிதியாண்டு வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி விபரம் :
2011-12 : ரூ.23,0000
2012-13 : ரூ.27,6966
2013-14 : ரூ.44,7284
2014-15 : ரூ.68,1018
2015-16 : ரூ.89,042
2016-17 : 0
2017-18 : 0
2018-19 : ரூ.3,000
2019-20 : ரூ.3,000
2020-21 : ரூ.3,000
2021-22 : ரூ.3,000
Also see... வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி போராட திட்டம் - கடலூரில் மூவர் கைது
இது குறித்து சமூக ஆர்வலர் கார்த்திக் கூறுகையில்,
"மத்திய அரசு சிறுபான்மையினருக்கான நலத்திட்ட நிதி ஒதுக்கீட்டை அடியோடு புறக்கணித்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இது தமிழகத்தை பாரபட்ச தன்மையுடன் அணுகுகிறதோ எனும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு நிதி ஒதுக்கீடுகளை தவிர்ப்பதால் மாநிலத்தில் பல வருடங்களாக சிறுபான்மையினர் மக்களுக்காக பிரத்யேகமாக வழக்கத்தில் இருந்து வந்த கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு பணிகள் பாதியிலேயே முடங்கியுள்ளது.
ஒன்றிய அரசு தமிழக சிறுபான்மையினர் நலத்துறைக்கு ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ரூ.100 கோடிகள் வரை நிதி ஒதுக்க வேண்டும். ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை பெற தமிழக அரசு தனியாக குழு அமைத்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.