முகப்பு /செய்தி /மதுரை / மின்சார துறையில் வேலை வாங்கி தருவதாக 7 லட்சம் மோசடி - மதுரையில் தம்பதி மீது வழக்கு

மின்சார துறையில் வேலை வாங்கி தருவதாக 7 லட்சம் மோசடி - மதுரையில் தம்பதி மீது வழக்கு

கைதான உதயகுமார்

கைதான உதயகுமார்

கொடுத்த பணம் குறித்து கேட்ட போது, கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர் மோசடி செய்த தம்பதி.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாநகர் திருநகர் SRV நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் - சாந்தி தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 21 வயதில் மகன் உள்ளார். மகன் படித்து முடித்து விட்டு தமிழ்நாடு அரசின் போட்டித் தேர்விற்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் வேல்முருகன் சாந்தி தம்பதியினரை தொடர்பு கொண்ட மதுரை கூடல்நகர் சீனிவாச நகர் பகுதியில் சேர்ந்த உதயகுமார் மற்றும் சுமதி தம்பதியினர், சாந்தியின் மகனுக்கு தமிழ்நாடு அரசு மின்சார துறையில் (TNEB) வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அவர்களிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளனர்.

பணம் பெற்றுக் கொண்டு பல மாதங்கள் ஆகியும் தங்களது மகனுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தராததால் வேல்முருகன் - சாந்தி தம்பதியினர் சந்தேகம் அடைந்தனர். மேலும் இதுகுறித்து உதயகுமார் மற்றும் சுமதியிடம் முறையிட்டனர். அதற்கு எவ்வித பதிலும் அளிக்காமல் போக்கு காட்டி வந்ததால் நேற்று முன்தினம் பணத்தை இழந்த விரக்தியில் உதயகுமார் மற்றும் அவரது மனைவி சுமதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த உதயகுமார் மற்றும் சுமதி தம்பதியினர், வேல்முருகன் மற்றும் சாந்தியை மிரட்டும் பாணியில் கொலை செய்து விடுவதாக கூறியுள்ளனர். தங்களது மகனுக்கு தமிழ்நாடு மின்சார துறையில் வேலை வாங்கி தருவதாக 7 லட்சம் ரூபாய் வாங்கியதுடன் கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் வேல்முருகன் - சாந்தி தம்பதி அதிர்ச்சியுற்றனர். இதையடுத்து சாந்தி உடனடியாக திருநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் கணவன் மனைவி இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த திருநகர் போலீசார், கணவர் உதயகுமாரை நேற்றிரவு கைது செய்தனர். மேலும் தப்பி ஓடி தலை மறைவாக உள்ள மனைவி சுமதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Madurai, TNEB, TNPSC