Home /News /madurai /

பரிகாரம் செய்வதாக கூறி மோதிரத்தில் இருந்து தங்கத்தை நூதன முறையில் திருடிய நபர் கைது

பரிகாரம் செய்வதாக கூறி மோதிரத்தில் இருந்து தங்கத்தை நூதன முறையில் திருடிய நபர் கைது

மோதிரம், குடுகுடுப்பைக்காரன்

மோதிரம், குடுகுடுப்பைக்காரன்

பரிகாரம் செய்வதாக கூறி தங்க மோதிரத்தை மாயவித்தை மூலம் உருக்கி கையும் களவுமாக சிக்கிய குடுகுடுப்பைக்காரனை கைது செய்து போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thirumangalam (Tirumangalam), India
திருமங்கலத்தில் பரிகாரம் செய்வதாக கூறி  தங்க மோதிரத்தில் இருந்து ரசாயனம் மூலம்  நூதன முறையில்  தங்கத்தை மட்டும் திருடிய குடுகுடுப்பைக்காரரை காவல்துறையினர் கைது செய்தனர். 

மதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜபுரம் ஆறுமுகம் வடக்கு இரண்டாவது தெருவை சேர்ந்த சுபாஷ், இவரது தந்தை மாசானம் அண்மையில் உடல் நலக்குறைவால் காலமானர்.  இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதிக்கு வந்த குடுகுடுப்பை காரர் ஒருவர் சுபாஷின் வீட்டின் அருகே நின்று இறந்த நபரின் ஆவி வீட்டு வாசலில் நின்று அழுது கொண்டிருப்பதாகவும் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் கூறிவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் மீண்டும் இன்று காலை வந்த அதே குடுகுடுப்பைக்காரர் சுபாஷிடம் இரவு சொன்ன விஷயங்களை கூறி பரிகாரம் செய்தால் ஆவிக்கு மோட்சம் தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி சுபாஷும் பரிகாரம் செய்ய முடிவ செய்தார். அப்போது  குடுகுடுப்பைக்காரர் ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதற்குள் தகடுகளை போட்டு சுபாஷ் கையில் ஒரு தகடையும் விபூதியையும் வைத்து  இருக்கமாக  மூடிக்கொண்டு பாத்திரத்திற்குள் கைவிடும் படி கூறியுள்ளார்.  தண்ணீர் உள்ள பாத்திரத்துக்குள் கைவிட்ட  சுபாஷின் கையில் சுடுவது போல் தெரிந்ததால் கையை எடுக்க முற்பட்டபோது குடு குடுப்பைக்காரர் சுபாஷ் கையை மீண்டும் தண்ணீருக்குள் அழுத்தியுள்ளார்.

பின்னர் வீட்டில் பரிகாரத்தை முடித்த குடுகுடுப்பைக்காரர் சுபாஷிடம் பணம் கேட்டுள்ளார். கையில் பணம் இல்லாததால்  ஏடிஎமில் எடுத்து தருவதாக கூறி ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது தனது கையில் இருந்த விபூதியை துடைத்த சுபாஷ் தனது கையில் இருந்த மோதிரத்தில் தங்கம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து உடனே வீட்டிற்கு சென்ற சுபாஷ் மோதிரத்தில் தங்கம் இல்லாதது குறித்து குடுகுடுப்பைக்காரரிடம் கேட்டுள்ளார்.  அவர் எவ்வித பதிலும் அளிக்காததால் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குடுகுடுப்பைகாரரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி முத்துராமலிங்கம் நகரை சேர்ந்த  காளிமுத்து என்பவரது மகன் முத்து மணி (27 ) எனவும் குறி சொல்வதற்காக திருமங்கலம் காட்டு பத்திரகாளி அம்மன் கோவிலில் தனது குடும்பத்தாருடன் தங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்க: Gold Silver Rate: சற்று குறைந்தது தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

பரிகாரம் செய்வதாக கூறி கையில் அணிந்திருந்த  மோதிரத்தில் ரசாயனம்  மூலம்  தங்கத்தை திருடியதையும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

செய்தியாளர்:  சிவக்குமார் தங்கைய்யா
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Gold, Madurai, Thirumangalam

அடுத்த செய்தி