முகப்பு /செய்தி /மதுரை / பிரதமர் மோடியின் திட்டத்தால் பயன்பெற்ற பெண்களுடன் செல்ஃபி - புதிய முன்னெடுப்பை தொடங்கி வைத்த வானதி சீனிவாசன்

பிரதமர் மோடியின் திட்டத்தால் பயன்பெற்ற பெண்களுடன் செல்ஃபி - புதிய முன்னெடுப்பை தொடங்கி வைத்த வானதி சீனிவாசன்

வானதி ஸ்ரீனிவாசன்

வானதி ஸ்ரீனிவாசன்

இது போன்ற மேலும் சில தேர்தல் வியூகங்களை அடுத்து வரும் ஓர் ஆண்டில் பாஜகவின் பல்வேறு அணிகளும் பிரிவுகளும் இந்திய முழுவதும் மேற்கொள்ள உள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மத்திய அரசின் மூலம் பயனடைந்த பெண் பயனாளிகளிடம் ஒரு கோடி செல்ஃபி எடுக்கும் இயக்கத்தை பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தொடங்கியுள்ளார்.

இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய பெண்களை நேரடியாக சந்தித்து மத்திய அரசின் திட்டங்கள் பெண்களுக்கு எவ்வாறு சென்று சேர்ந்து இருக்கிறது?, அந்த திட்டங்கள் எப்படி பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது?, என்பதை எடுத்து சொல்வதற்காக புதிய முன்னெடுப்பு ஒன்றை பாஜக மகளிர் அணி முன்னெடுத்துள்ளது. இதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு அங்கு இந்த இயக்கத்திற்கான முதல் செல்ஃபியை வானதி ஸ்ரீனிவாசன் எடுத்தார்.

இதனை தொடர்ந்து பேசிய அவர், “பெண் சிசுக் கொலையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டது பெட்டி பச்சாவோ, பெட்டி பதாவோ, சிறிய அளவில் தொழில் தொடங்க நினைக்கும் பெண்களுக்காக ‘எஸ்.எம்.இ மகிளா பிளஸ்’ என்கிற சிறப்புத் திட்டம், மகிளா இ- ஹாட் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டு நேரடி ஆன்லைன் மார்க்கெட்டிங் தளம் இது. இந்தத் திட்டம் பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவாக உருவாக்கப்பட்டது. இதுவும் ‘டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது போன்ற பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கான திட்டங்களை மத்திய அரசு கொடுத்து இருக்கிறது. அதன் மூலம் பயனடைந்த பெண்களை சந்திப்பதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம்.

அடுத்த ஆண்டு வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு மக்களை நேரடியாக சந்திப்பதற்கும் அதிலும் குறிப்பாக பெண் வாக்காளர்களிடம் நேரடியாக தொடர்பு வைத்துக் கொள்வதற்காகவும் இந்த திட்டத்தை கையில் எடுத்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

மேலும், “அடுத்த ஓராண்டிற்கு இந்த செல்பி இயக்கத்தை இந்தியா முழுவதும் மத்திய அரசின் மூலம் பயன்பெற்ற பெண்களை சந்தித்து அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டு அதை ஆவணப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி அடுத்த ஓராண்டுக்கு இந்த இயக்கம் இந்தியா முழுவதும் மகளிர்களை சந்தித்து வானதி சீனிவாசன் அவர்களுடன் செல்ஃபி எடுக்க உள்ளார். பாஜக பல்வேறு திட்டங்கள் மூலம் தேர்தல் பணிகளை மிக தீவிரமாக எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாகவே இந்த செல்பி இயக்கத்தை மகளிர் அணி கையில் எடுத்துள்ளது இது போன்ற மேலும் சில தேர்தல் வியூகங்களை அடுத்து வரும் ஓர் ஆண்டில் பாஜகவின் பல்வேறு அணிகளும் பிரிவுகளும் இந்திய முழுவதும் மேற்கொள்ள உள்ளன.

தமிநாட்டை பொறுத்தவரை வரும் ஏப்ரல் மாதத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் போது பாஜகவை எதிர்கால திட்டம், திமுக ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டி அண்ணாமலை தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்வார், அவரது சுற்றுப்பயணம் திட்டங்களை பாஜக மூத்த நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள்” எனவும் கூறினார்.

First published:

Tags: Madurai, Selfie, Vanathi srinivasan