ஹோம் /நியூஸ் /மதுரை /

மத்திய அரசு திட்டங்களின் பெயரை அப்படியே தமிழில் பயன்படுத்த தடை கோரிய வழக்கு... மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு...

மத்திய அரசு திட்டங்களின் பெயரை அப்படியே தமிழில் பயன்படுத்த தடை கோரிய வழக்கு... மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு...

உயர்நீதிமன்ற மதுரை கிளை

உயர்நீதிமன்ற மதுரை கிளை

High Court | பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா, பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஆசாதி யோஜனா, ஸ்வச் பாரத், ஜல் சக்தி  உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Madurai, India

இந்தியில் உள்ள மத்திய அரசு திட்டங்களின் பெயரை    அப்படியே தமிழில் பயன்படுத்த தடை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசு பதில் அளிக்க உயர்  நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன்,  உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல வழக்கில், மத்திய அரசு சார்பில் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது . ஏழை ,  எளிய மக்கள் பயன்பெறும் வகையில்  பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

மத்திய அரசின்  திட்டங்களுக்கு  இந்தி மொழியில்  பெயரிடப்படும் திட்டத்தின் பெயரை தமிழகத்தில் செயல்படுத்தும்போது அந்த திட்டத்தின் பொருள் புரிந்து  தமிழில் மொழியாக்கம் செய்யாமல், இந்தி மொழியில் அந்த திட்டத்தை எவ்வாறு அழைக்கிறார்களோ, அதேபோல்  தமிழகத்திலும்  பெயரிட்டு அழைக்கிறார்கள்.

இதையும் படிங்க : கல்லூரி மாணவன் பெயரில் வங்கி கணக்கு.. 7 நாட்களில் ரூ. 77 லட்சம் பரிவர்த்தனை.. மதுரையில் பரபரப்பு

இதனால் மத்திய அரசின் திட்டத்தின் பெயர் என்ன? அதன் நோக்கம் என்ன? என்று அனைத்து தரப்பு மக்களாலும் புரிந்துகொள்ள இயலவில்லை. இதனால் இந்த திட்டங்கள் முழுமையாக அனைத்து தரப்பு மக்களிடம் சென்றடையவில்லை.

உதாரணமாக. பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா, பிரதான் மந்திரி சுகன்யா சம்ரிதி யோஜனா, பிரதான் மந்திரி முத்ரா யோஜனா, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா,  பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா, பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஆசாதி யோஜனா, ஸ்வச் பாரத், ஜல் சக்தி  உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இந்தி மொழியில் பெயரிடப்பட்ட திட்டத்தின் பெயரை தமிழில் மொழியாக்கம் செய்து அதன் பொருள்  புரிந்து தமிழில் மொழியாக்கம் செய்யவேண்டும். ஆனால் மத்திய அரசின் திட்டத்தின் பெயரை  அப்படியே தமிழில் மொழியாக்கம் செய்து பயன்படுத்துகின்றனர் .

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா, (பிரதமரின் மக்கள் நிதி திட்டம்), பிரதான் மந்திரி சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வ மகள் திட்டம்), பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (முத்ரா கடன் திட்டம்), பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (விபத்து காப்பீட்டுத் திட்டம்) பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா (பயிர் காப்பீட்டுத்திட்டம்), பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஆசாதி யோஜனா (மலிவு விலை மருந்து கடைகள் திட்டம்), ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா) போன்ற பல திட்டங்களும் தமிழ்நாட்டில் இந்தி பெயரிலியே செயல்படுத்தப்படுகின்றன.

இதையும் படிங்க : ஊர்ந்து சென்று பதவியை பெற்றது யார் என்று ஊருக்கே தெரியும் - ஓபிஎஸ் அதிரடி!

சில ஆண்டுகளுக்கு முன், தமிழகத்திற்குள் இயக்கப்படும் ரயில்களுக்கு வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், கூடல் எக்ஸ்பிரஸ், செந்தூர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், கூடல் எக்ஸ்பிரஸ் என தமிழ் பெயர் சூட்டப்பட்டது.  மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், சிலம்பு எக்ஸ்பிரஸ், முத்து நகர் எக்ஸ்பிரஸ் மற்றும் அனதாபுரி எக்ஸ்பிரஸ் என அனைத்து தரப்பு மக்களும் புரிந்து கொண்டு அந்த பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ள முடிந்தது.

தற்போது, அந்த்யோதயா எக்ஸ்பிரஸ், தேஜாஸ் எக்ஸ்பிரஸ், துரந்தோ எக்ஸ்பிரஸ் மற்றும் சுவிதா எக்ஸ்பிரஸ் என வெவ்வேறு பெயர்களில் ரயில்கள் பெயரிடப்பட்டு உள்ளன. ரயில்களின் பெயரின் உண்மையான அர்த்தம் யாருக்கும் புரியவில்லை.  துரந்தோ எக்ஸ்பிரஸ் என்பது நெடுந்தொலைவு  நான்-ஸ்டாப் மூலம் இலக்கு ரயில்களுக்கு பெயரிடப்பட்டு உள்ளது. வங்காள மொழியில் "துரந்தோ" என்றால் "வேகக்காரர்" என்று பொருள்.

சுவிதா எக்ஸ்பிரஸ் , பிரீமியம் எக்ஸ்பிரஸ் தொடர் ரயில்கள் என்றும் அழைக்கப்படுகிறது,

தேஜாஸ் எக்ஸ்பிரஸ் என்றால் அதிவேக ரயில் மற்றும் முழு குளிரூட்டப்பட்ட ரயில். அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் முற்றிலும் முன்பதிவு செய்யப்படாதது மற்றும் பொதுப் பெட்டிகள்.  இதனால்  மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்படும்,  இந்தி மொழியில் பெயரிடப்பட்ட  திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தும் பொழுது  திட்டத்தின் பெயரை,  அதன் பொருள் புரிந்து தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.

இதையும் படிங்க : மதுரை நகர அமைப்பை விவரித்து போற்றும் சங்க பாடல் உங்களுக்கு தெரியுமா? 

இந்த பொது நல வழக்கு நீதிபதிகள் R.மகாதேவன், J.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கை குறித்து மத்திய,  மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

First published:

Tags: Hindi, Madurai, Madurai High Court