பொங்கலை முன்னிட்டு மதுரையின் முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் ராஜன் முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் 8 மணிக்கு போட்டி தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டில் 700 மேற்பட்ட காளைகளும் 250 மாடுபிடி வீரர்களும் உற்சாகமாக பங்கேற்றனர். சிறந்த மாடு பிடி வீரர்கள் மற்றும் காளைக்கு முதலமைச்சர் சார்பில் கார், அமைச்சர் உதயநிதி சார்பில் 2 பைக் பரிசு வழங்கப்பட உள்ளன. காளைகளை சிறப்பாக அடக்கும் வீரர்கள், வெற்றிபெரும் காளைகளுக்கு தங்க, வெள்ளி காசுகள், சைக்கிள், கட்டில் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட உள்ளன.
முன்னதாக போட்டி முறைகேடுகளை தவிர்க்க கியூ ஆர் குறியீடு, ஆதார் எண், புகைப்படத்துடன் டோக்கன் வழங்கப்பட்டது. வீரர்கள் மது அருந்தியுள்ளனரா என்பன உள்ளிட்ட உடல் பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னர்தான் வாடியில் அனுமதிக்கப்பட்டனர். மாடுகள் உடலில் எண்ணெய், இரசாயன பவுடர் தடவப்பட்டுள்ளனவா, கண், மூக்கில் பொடி தூவப்பட்டு உள்ளனவா என்பன போன்ற பரிசோதனைகள் செய்த பின்னர் அனுமதிக்கப்பட்டன.
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு குறைந்தபட்ச பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மொத்தம் 1200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராவால் கண்காணிக்கப்படுகிறது.
இதில் 11 சுற்றுப்போட்டிகள் நடைபெற்ற நிலையில் 28 காளைகளை பிடித்து மாடுபிடி வீரர் விஜய் முதல் இடத்தை பிடித்தார். 17 காளைகளை பிடித்து கார்த்தி இரண்டமும் 13 காளைகளை பிடித்து பாலாஜி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
முதல் பரிசு வென்ற நபருக்கு முதலமைச்சர் சார்பில் கார் வழங்கப்படுகிறது. இரண்டாம் இடம் வென்ற நபருக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் டூவீலரும் வழங்கப்படுகிறது. மேலும் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கும் ஒரு டூவீலர் பரிசாக வழங்கப்படவுள்ளது.
முதலிடம் பெற்ற மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய், மின்வாரிய ஹேங்மேனாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Avaniyapuram, Jallikattu, Madurai