Home /News /madurai /

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்...

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்...

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா தொடக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா தொடக்கம்

Madurai | மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பு வாய்ந்தவை. இதில் சித்திரை திருவிழாவின் போது மீனாட்சி அம்மனுக்கும், ஆவணி மூல திருவிழாவின் போது சுந்தரேசுவரருக்கும் பட்டாபிஷேக விழா நடைபெறும். ஆவணி திருவிழாவில் தான் சுந்தரேசுவரர் நிகழ்த்திய திருவிளையாடல் லீலைகள் நடைபெறும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து ஆக.29 முதல் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை 12 நாட்கள் 12 திருவிளையாடல் நிகழ்வுகள் நடைபெறும்.ஆக.29 - கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல், ஆக.30 - நாரைக்கு மோட்சம் அளித்தல், ஆக.31 - மாணிக்கம் விற்றல், செப்.1 - தருமிக்கு பொற்கிழி அருளியது, செப்.2 - உலவாக்கோட்டை அருளியது, செப்.3 - பாணனுக்கு அங்கம் வெட்டியது மற்றும் திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தல வரலாறு திருவிளையாடல், செப்.4 - வளையல் விற்றல், செப்.5 - நரியை பரியாக்கியது, செப்.6 - பிட்டுக்கு மண் சுமந்த லீலை, செப்.7 - விறகு விற்ற படலம் ஆகிய திருவிளையாடல் நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

மதுரையில் சித்திரை முதல் ஆவணி வரை 4 மாதங்கள் மீனாட்சி அம்மன் ஆட்சியும், ஆவணி முதல் சித்திரை வரை 8 மாதங்கள் சுந்தரேசுவரர் ஆட்சியும் நடைபெறும் வழக்கத்தின் அடிப்படையில் செப்.4 ஆம் தேதியன்று இரவு 7:35 மணி முதல் 7:59 மணிக்குள் சுந்தரேசுவரர் பட்டாபிஷேக நிகழ்வு நடைபெறும்.

மதுரை மீனாட்சி அம்மன் - உற்சவர்


செப்.6 ஆம் தேதி நடைபெறும் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்வை முன்னிட்டு சுவாமியும் அம்மனும் அதிகாலையில் கோவிலில் இருந்து புறப்பட்டு பிட்டுத்தோப்புக்கு சென்று உற்சவம் முடிந்து இரவு 9:30 மணிக்கு கோவிலுக்கு வந்தடைவர்.

Also see... விருதுநகர் கௌசிகா நதிக்கரையில் பாண்டியர் கால சிவாலயம் - வரலாற்று சிறப்புகள் தெரியுமா?

அன்றைய தினம் பக்தர்கள் அனைவரும் வடக்கு கோபுர வாசல் வழியாக சென்று ஆயிரங்கால் மண்டபத்தினை காலை  7 - 12 மணி வரையும், மதியம் 3 முதல் 8 மணி வரையும் கண்டு களிக்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Hindu Temple, Madurai

அடுத்த செய்தி