Home /News /madurai /

காரில் கல்லைப்போட்டு வங்கி ஊழியரை கொல்ல முயற்சி - பதறவைக்கும் வீடியோ

காரில் கல்லைப்போட்டு வங்கி ஊழியரை கொல்ல முயற்சி - பதறவைக்கும் வீடியோ

மதுரை சம்பவம்

மதுரை சம்பவம்

மதுரையில் முன்விரோதம் காரணமாக காரில் கல்லைப் போட்டு தனியார் வங்கி ஊழியரை கொலை செய்ய முயன்ற சகோதரர்கள் கைது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியை சேர்ந்த போஸ் என்பவரின் மகன்கள் ஜெகதீசன் (34) மற்றும் தினேஷ் (33). இதில் ஜெகதீசன் சிவகங்கை மாவட்டம் எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவர் ஆவார். இவரது தம்பி தினேஷ் (33) மதுரை மாவட்டம் அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வந்தார்.

இவர்களின் குடும்பத்தினருக்கும் சென்னையில் தனியார் வங்கியில் பணியாற்றும் அதே ஊரை சேர்ந்த பொன்னாச்சி என்பவரின் மகன் வடிவேலன் (40) என்பவருக்கும் ஏற்கனவே ஒரு இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.இந்நிலையில் நேற்று இரவு அரிட்டாபட்டி ரோட்டில் காரில் வடிவேலன் வந்து கொண்டிருந்த போது ஆண்டிக்கோவில்  அருகே அடையாளம் தெரியாத சில நபர்கள் அந்த காரை வழி மறித்து காரின் மீது கல்லை தூக்கிப் போட்டு, வடிவேலையும் தாக்க முற்பட்டுள்ளனர்.

Also Read :  தமது புகழுக்கு களங்கம் விளைவிக்கவே ஊழல் குற்றச்சாட்டு - ஈபிஎஸ் விளக்கம்!

இந்த சம்பவங்கள் வடிவேலின் காரில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது இந்த காட்சிகளின் அடிப்படையில் வடிவேலன் மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மேலூர் காவல்துறையினர் ஜெகதீசன் மற்றும் தினேஷ் ஆகிய போலீஸ் சகோதரர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Ramprasath H
First published:

Tags: Attempt murder case, Banks, Crime News, Madurai

அடுத்த செய்தி