ஹோம் /நியூஸ் /Madurai /

விஜய் தன் ரசிகர்களுக்கு அறிவுரை கூற வேண்டும் - அர்ஜுன் சம்பத்

விஜய் தன் ரசிகர்களுக்கு அறிவுரை கூற வேண்டும் - அர்ஜுன் சம்பத்

அர்ஜுன் சம்பத்

அர்ஜுன் சம்பத்

Madurai : மதுரை ஆதீனத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வேண்டும் என்று அர்ஜுன் சம்பத் கூறினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு தர வேண்டி மதுரை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் அர்ஜுன் சம்பத் மனு அளித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் வாதிகளாலும், சினிமா ரசிகர்களாலும் மதுரை ஆதீனம் அச்சுறுத்தப்படுகிறார் என்று கூறினார்.

  மதுரை ஆதீனம் அரசியல்வாதிகளைப் போல் நடந்து கொள்கிறார் என்றும், நாங்கள் பாய்ந்து விடுவோம் என்றும் அறநிலையத்துறை அமைச்சர் கூறுவது அபாயகரமான போக்கு, என்று கூறிய அர்ஜுன் சம்பத், சிதம்பர நடராஜ பெருமானை இழிவுபடுத்தி கருத்துக்களை வெளியிட்டவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

  மேலும், இந்து சமயத்திற்கு ஒரு வில்லங்கம் என்றால் மதுரை ஆதினம் குரல் கொடுப்பார், அப்படி குரல் கொடுப்பதால், அதிமுக, பாஜக ஆதரவாளார் என்பதெல்லாம் கிடையாது. விஜய் ரசிகர்கள் ஆதீனத்தின் மீது தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடுகின்றனர். தாய் தகப்பனை விட நடிகர் விஜய் பெரிய நபர் ஒன்றும் கிடையாது.

  விஜய் தன் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும்.

  சு.வெங்கடேசனும் மதுரை ஆதீனத்தை மிரட்டுவது போல் பேசி வருகிறார். அவருக்கும் எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தேவாலயம் சொத்துகள் கிறிஸ்தவர்களிடமும், முஸ்லிம் சொத்து முஸ்லிம்களிடமும் இருக்கிற பொழுது, ஏன் ஆலய சொத்துக்கள் மட்டும் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும். எங்களது உரிமைக் குரலாக ஆதினம் இருந்து வருகிறார். மதுரை ஆதீனத்தை பற்றிப் பேசிய அமைச்சரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த  எடப்பாடி பழனிச்சாமிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  Must Read : ஆன்லைன் ரம்மிக்கு விரைவில் தடை சட்டம்? ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் பரிந்துரை குழு அமைத்தார் முதல்வர் ஸ்டாலின்

  மதுரை ஆதீனத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்த வேண்டும் என்பது எங்களது எண்ணம். அதற்கு மாநில அரசு கொடுக்கவில்லை என்று சொன்னால் மத்திய அரசை வலியுறுத்துவோம்” என்று அர்ஜுன்சம்பத் கூறினார்.

  செய்தியாளர் - ஹரிகிருஷ்ணன், மதுரை.

  Published by:Suresh V
  First published:

  Tags: Arjun Sampath, Madurai, Madurai Adhinam, Vijay