ஹோம் /நியூஸ் /மதுரை /

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. மீண்டும் வாடிவாசலை நோக்கி கூட்டமாக வந்த காளைகள்.. மிரண்ட வீரர்கள்..!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. மீண்டும் வாடிவாசலை நோக்கி கூட்டமாக வந்த காளைகள்.. மிரண்ட வீரர்கள்..!

வாடிவாசலை நோக்கி வந்த காளைகள்

வாடிவாசலை நோக்கி வந்த காளைகள்

alanganallur jallikattu 2023 | அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களத்தின் எல்லையை தாண்டிய சில காளைகள் சில, கூட்டமாக மீண்டும் வாடிவாசலை நோக்கி வந்து, மாடுபிடி வீரர்களை மிரட்டின.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

அலாங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கிவைத்த நிலையில், முதலில் கோயில் மாடுகள் களமிறக்கப்பட்டன. முதல் சுற்றில் 62 காளைகள் களமிறக்கப்பட்ட நிலையில், 25 வீரர்கள் பங்கேற்றனர். வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை பிடித்த வீரர்களுக்கும், களத்தில் சிறப்பாக விளையாடிய காளைக்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதியின் உருவம் பரித்த தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது. மேலும், களத்தில் நின்று விளையாடிய காளைகளுக்கு சிறப்பு பரிசாக தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

முதல் சுற்றில் அவிழ்க்கப்பட்ட 62 காளைகளில் 10 காளைகள் மட்டுமே பிடிபட்டன. போட்டியின் போது களத்தின் எல்லையை தாண்டிய சில காளைகள் சில, கூட்டமாக மீண்டும் வாடிவாசலை நோக்கி வந்து, மாடுபிடி வீரர்களை மிரட்டின. இதனால் களத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து காளைகளை அழைத்து வருபவர்களுக்கு காயத்திரி, வேதிகா, யோகா ஆகிய இளம்பெண்கள், தேநீர் வழங்கி உற்சாகப்படுத்தி வாடி வாசலுக்கு அனுப்பினர். உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியை நேரில் கண்டு ரசித்தனர். நீதிபதிகள் ஜெகதீஸ் சந்திரா, குமரேஷ் பாபு, புகழேந்தி உள்ளிட்டோர் விழா மேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டை உற்சாகத்தோடு கண்டு களித்தனர்.

களத்தில் வேட்டையாட துடித்து, வெற்றி கண்ட காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பிரோ, கட்டில், சைக்கிள்,பிரிட்ஜ், வாசிங்க் மெசின் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வரிசைக்கட்டி வழங்கப்பட்டு வருகின்றன.

First published:

Tags: Alanganallur, Jallikattu