மதுரை அருகே ஆதனூர் முத்தாலம்மன் கோவில் காளை நேற்று வயது முதிர்வால் காலமானது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் ஆதனூர் முத்தாலம்மன் கோவில் காளையான சண்டியர் காளை தனது சிறு வயது முதலே கோயில் காளையாக வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த காளை ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கு பெற்று பரிசு பெறும். மேலும் பல மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு தனக்கென்று தனி முத்திரையை பதித்துள்ளது.
ஜல்லிக்கட்டு களத்தில் காளையை தொட கூட முடியாது என்ற பெயரை பெற்றுள்ளது. இந்த ஊரின் காவல் தெய்வமாகவும் காளை விளங்கி வந்துள்ளது. இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாமல் இருந்த காளை நேற்று வயது முதிர்வு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தது.
இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள், காளைக்கு இறுதி சடங்குகள் செய்து, கண்ணீருடன் காளையை நல்லடக்கம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Alanganallur, Jallikattu, Jallikkattu kaalai dead, Local News