Home /News /madurai /

அஜித்திற்கு அரசியல் சாயம் பூசும் ரசிகர்கள்.. மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டர்கள் வைரல்

அஜித்திற்கு அரசியல் சாயம் பூசும் ரசிகர்கள்.. மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டர்கள் வைரல்

அஜித் ரசிகர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டர்

அஜித் ரசிகர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டர்

Ajith Poster : நடிகர் அஜித்குமார் திரையுலகில் அறிமுகமாகி 30 வருடம் நிறைவு செய்ததையொட்டி மதுரையில் அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரைத்துறையில் முன்னணி நட்சத்திரங்களின் வரிசையில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். 1992ஆம் ஆண்டு ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படம் அவருக்கு ‘சிறந்த புதுமுகத்திற்கான விருதைப்’ பெற்றுத்தந்தது.

அதே ஆண்டில், செல்வா இயக்கத்தில், ‘அமராவதி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதுவே, தமிழ்த் திரையுலகில் அவரது முதல் படமாகும். அன்றிலிருந்து இந்த ஆண்டு வெளியான வலிமை திரைப்படம் வரை தனக்கென ஒரு பாணியில் தனித்துவமாக நடித்து வருகிறார் அஜித்.

அஜித்குமார் நடிகராக மட்டுமல்லாமல், புகைப்படங்கள் எடுப்பது, கார், பைக் பந்தயங்களில் பங்கேற்பது போன்ற இதர விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த வாரம் திருச்சியில் நடைபெற்ற 47வது தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகின.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதுரையில் அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்


நடிகர் அஜித் 10மீ, 25மீ, 50 மீ துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்று 4 தங்க பதக்கங்களும், 2 வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளார். இதனை அவர் ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில் தற்போது ஆகஸ்ட் 3 ஆம் தேதி அஜித் திரைத்துறையில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவு செய்கிறார்.

Must Read : இளம்பெண்ணை வீடு புகுந்து கதறக்கதற கடத்திச்சென்ற கும்பல்... கும்பகோணத்தில் பரபரப்பு

இதனை ஒட்டி அவரை வாழ்த்தும் விதமாக  “பயணங்கள் முடிவதில்லை” 30 வருட திரையுலகம் பெருமிதம் இப்போது, தமிழகம் பெறும் மகிழ்ச்சி அடைவது எப்போது? தலைமைச் செயலகத்துடன் மதுரையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அரசியல் வசனம் அடங்கிய அஜித்தின் போஸ்டர்  சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
Published by:Suresh V
First published:

Tags: Actor Ajith, Ajith, Ajithkumar, Madurai, Poster

அடுத்த செய்தி