ஹோம் /நியூஸ் /மதுரை /

எய்ம்ஸ் கட்டுமான பணிகள் ஓராண்டில் தொடங்கும்.. எய்ம்ஸ் இயக்குனர் பிரத்யேக தகவல்..!

எய்ம்ஸ் கட்டுமான பணிகள் ஓராண்டில் தொடங்கும்.. எய்ம்ஸ் இயக்குனர் பிரத்யேக தகவல்..!

மதுரை எய்ம்ஸ்

மதுரை எய்ம்ஸ்

AIIMS | 3 மாதங்களில் கட்டுமானத்திற்கான டெண்டர் பணிகள் நிறைவுற்று, 6 மாதங்களில் கட்டுமானத்திற்கான டிசைனிங் உள்ளிட்ட ஆயத்த பணிகள் முடிவடையும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai | Tamil Nadu

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி ஓராண்டில் தொடங்கும் என எய்ம்ஸ் இயக்குனர் ஹனுமந்தராவ் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டு 2018 ஜூனில் மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பப்பட்டது. அதன் பின்னர் 6 மாதங்கள் கழித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 2019-ல் பாராளுமன்ற தேர்தல் நெருங்கிய வேளையில் 27.01.2019 அன்று மதுரை எய்ம்ஸ்க்கு  அடிக்கல் நாட்டப்பட்டது.

    ஆயிரத்து 264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    150 படுக்கை கொண்ட தொற்று நோய்ப் பிரிவு ஒன்றை துவக்குவது என்ற புதிய முடிவின் காரணமாக திட்ட மதிப்பீடு ரூ.1264 கோடியில் இருந்து ரூ 1977.8 கோடியாக உயர்த்தப்பட்டது.

    அதன்பின்னர், ஜெய்காவுடன் கடனுக்கான ஒப்பந்தம் 2021 மார்ச்சில் கையெழுத்தானது.

    இதையும் படிங்க | வைகை ஆற்றின் அழகை கெடுக்கும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படுமா? 

    மொத்த நிதித் தேவையான ரூ.1977.8 கோடிகளில் 82% சதவீத தொகையான ரூ1627.7 கோடிகளை ஜெய்கா நிறுவனம் மூலம் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    அக்டோபர் 2026க்குள்ளாக எய்ம்ஸ் பணிகள் முடிக்கப்படுமென்று ஒப்பந்தம் தெரிவித்த நிலையில், எப்போது கட்டுமான பணிகள் துவங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகாமலே இருந்தது.

    இந்நிலையில், ஜெய்கா நிறுவனத்தின் அதிதி பூரி, ரியோ ஒகுச்சி, எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் நாகராஜன், இயக்குநர் ஹனுமந்தராவ் மற்றும் பொறியியல் குழு அதிகாரிகள் ஆகியோர் இன்று தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

    எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கான முன்மொழிவு கோரிக்கைக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 3 மாதங்களில் கட்டுமானத்திற்கான டெண்டர் பணிகள் நிறைவுற்று, 6 மாதங்களில் கட்டுமானத்திற்கான டிசைனிங் உள்ளிட்ட ஆயத்த பணிகள் முடித்து, 1 ஆண்டிற்குள் கட்டுமான பணிகள் துவங்கும் என அதன் இயக்குநர் ஹனுமந்தராவ் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு தகவல் அளித்துள்ளார்.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: AIIMS, AIIMS Hospital, Aiims Madurai, Madurai