மக்கள் கடனில் தவிக்கும் போது கடலில் பேனா எதற்கு? - செல்லூர் ராஜூ கேள்வி
மக்கள் கடனில் தவிக்கும் போது கடலில் பேனா எதற்கு? - செல்லூர் ராஜூ கேள்வி
மதுரையில் அதிமுக போராட்டம்
மக்கள் கடனில் தவிக்கும் போது கடலில் பேனா எதற்கு என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழகத்தில் அதிமுக மட்டுமே எதிர்கட்சி என்று பேசியுள்ளார்.
மக்கள் கடனில் தவிக்கும் போது கடலில் பேனா எதற்கு என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை முனிச்சாலை பகுதியில் அதிமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளரும், எம்.எல்.ஏவுமான செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் சுமார் 500 தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது செல்லூர் ராஜூ பேசுகையில்,"தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேலிக்கூத்தாக உள்ளது. இந்தியாவிலேயே சட்ட ஒழுங்கு மோசமான மாநிலம் என்று சர்வே சொல்கிறது. இது வேதனையாக உள்ளது. நீட் தேர்வு ரத்து, 7 பேர் விடுதலை வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆச்சு?
செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் லெஜன்ட் சரவணா போல கோட்டு, சூட்டு போட்டுக்கொண்டு நடந்து வந்து மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார் ஸ்டாலின். ஆனால், அதில் செஸ் சாம்பியன்களை காணோம். சீன அதிபர் உடனான சந்திப்பின் போது வேஷ்டி கட்டிக்கொண்டு வந்த மோடி தான் உண்மையான தமிழர்.ஸ்டாலின் தன்னை தமிழர் என சொல்லி ஏமாற்றி கொண்டிருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளிக்கு சம்பந்தம் இல்லை என்றார் டிஜிபி. பின்னர் மறுநாள் மூன்று பேரை கைது செய்தார்கள். அதிமுக ஆட்சியில் அனிதா இறந்த போது அவ்வளவு விமர்சனம் செய்து போராடியவர்கள், இப்போது எங்கே போனார்கள்? திருமா, வைகோ, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் யாரையுமே காணோமே.
தமிழகத்தில் திமுகவுக்கு அடுத்த நாங்கள் தான் என சிலர் (பாஜக) சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அதை பொய்யாக்கும் வகையில் இந்த ஆர்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்தின் ஒரே எதிர்கட்சி அதிமுக தான். மக்கள் கடனில் தவிக்கும் போதும், கடலில் பேனா எதற்கு?" என விமர்சித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.