Home /News /madurai /

அதிமுக முன்னாள் அமைச்சரின் மருமகன் தூக்கிட்டு தற்கொலை!

அதிமுக முன்னாள் அமைச்சரின் மருமகன் தூக்கிட்டு தற்கொலை!

சரவணன்

சரவணன்

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சரின் மருமகன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கடந்த அதிமுக ஆட்சியில் காதி மற்றும் கதர்கிராமத் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் பாஸ்கரன். இவரின் மகள் சுமதி மற்றும் அவரது கணவர் சரவணன் ஆகியோர் அவர்களது இரு குழந்தைகளுடன்  மதுரை கருப்பாயூரணி அருகே ஒத்தப்பட்டி பகுதியில் வசித்துவந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு சரவணன் நேற்றிரவு தனது அறையில் தனியாக படுத்து உறங்கியுள்ளார். இன்று அதிகாலை அவரது மனைவி சுமதி, சரவணனை எழுப்புவதற்காக கதவை தட்டியபோது அவர் நீண்ட நேரமாக திறக்காமல் இருந்துள்ளார்.

அப்போது அருகிலுள்ள சரவணனின் சகோதரர் கர்ணனை அழைத்துவந்து பார்த்துள்ளார். இதையடுத்து  கடப்பாரை மூலம் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது  சரவணன் படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சரவணன் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும்  கருப்பாயூரணி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோதற்கொலை எண்ணம் உண்டானாலோஅதனை மாற்றகீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

 
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: ADMK, Commit suicide, Madurai

அடுத்த செய்தி