முகப்பு /செய்தி /Madurai / பாஜக கூட்டம்; காக்கா கூட்டம்.. அண்ணாமலைக்கு பதவி ஆசை: செல்லூர் ராஜு விமர்சனம்

பாஜக கூட்டம்; காக்கா கூட்டம்.. அண்ணாமலைக்கு பதவி ஆசை: செல்லூர் ராஜு விமர்சனம்

செல்லூர் ராஜு

செல்லூர் ராஜு

தமிழிசைக்கு கவர்னர் பதவி கிடைத்தது போல, எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது போல அண்ணாமலையும் தனக்கு ஏதாவது பதவி கிடைக்கும் என ஆசைப்பட்டு ஏதோ அரசியல் செய்கிறார். கூட்டம் திரட்டுவது எல்லாம் பெரிய விஷயமே அல்ல. பாஜகவிற்கு கூடுவது காக்கா கூட்டம்; அதிமுகவுக்கு கூடுவது கொள்கை கூட்டம் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பதவிக்கு ஆசைப்பட்டு அண்ணாமலை அரசியல் செய்து கொண்டிருப்பதாக விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தேர்தலில் தனித்து நிற்க அதிமுக தயாராக இருக்கிறது, பிற கட்சிகள் தயாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை கோரிப்பாளையம் அருகேயுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், மதுரை மாநகராட்சிக்கு பொறுப்பேற்றுள்ள புதிய ஆணையர்,பழைய ஆணையரை போல் மெத்தனமாக இல்லாமல் வேகமாக செயல்பட வேண்டும். மாநகராட்சியில் உள்ள வருவாய் பற்றாக்குறை வசூல் செய்யவும், கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எந்த மாநகராட்சியிலும் இல்லாத அதிசயமாக மதுரை மாநகராட்சி மேயருக்கு உதவியாளர் என்ற பெயரில் நகராட்சி நிர்வாக சட்டத்திற்கு விரோதமாக ஒரு "சூப்பர் மேயர்" ஒருவரை நியமித்து உள்ளார்கள். இந்த நியமனத்திற்கு சட்ட ரீதியாக இடமே கிடையாது. மேயருக்கு உதவி செய்வதற்காக ஆணையர், அதிகாரிகள் இருக்கும் போது ஒரு தனி நபரை நியமித்து இருப்பது தவறு.

பாதாள சாக்கடைத் பணி விபத்தின் போது அனுபவம் இல்லாத பொக்லைன் இயந்திர ஓட்டுனரை ஈடுபடுத்தியதால் தான் ஊழியர் தலை துண்டாகும் நிலை ஏற்பட்டது. கழிவு நீர் மேலாண்மைக்காக அதிமுக ஆட்சியில் ரூ.54 லட்சம் மதிப்பில் வாங்கிக் கொடுக்கப்பட்ட இயந்திரத்தின் நிலை என்னவென்று தெரியவில்லை என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம், தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது: அமைச்சர் சேகர் பாபு

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியது தொடர்பாக பதிலளித்த செல்லூர் ராஜு, ஐ.பெரியசாமி வேறு துறை கிடைக்காத கோபத்தில் முதலமைச்சரை சிக்கலில் மாட்டி விடுகிறார்.எழுவர் விடுதலை, நீட் விலக்கு, கல்விக்கடன் ரத்து, டீசல் மானியம் குறைப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் எதுவும் நிறைவேற்றவில்லை என குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “பாஜக  மத்தியில் ஆட்சியில் உள்ளதால் திமுக அமைச்சர்கள் குறித்த ஊழல் தொடர்பான விபரங்கள் அவருக்கு கிடைக்கலாம். அதனடிப்படையில் அமைச்சர்கள் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக அண்ணாமலை சொல்கிறார்.திமுக ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளது என்பதை அதிமுக நெடுங்காலமாக சொல்லிக்கொண்டு தான் இருக்கிறது.

தமிழகத்தில் அதிமுக தான் எதிர்கட்சி. திமுக அரசின் குற்றங்களை அதிமுக தான் அதிகமாக சுட்டிக் காட்டிக்கொண்டு இருக்கிறது. சட்டசபையில் அதிமுக பேசும் பல பேச்சுக்கள் வெளியே வருவதில்லை. சினிமாவில் ஒரு சென்சார் போர்டு இருப்பது போல சட்டசபைக்கும் ஒரு சென்சார் போர்டு உள்ளது. பொன்னையன் கட்சி வளர்ச்சிக்காக பேசியது வெளியே வந்து விட்டது. பொன்னையன் பார்வையில் பாஜகவின் செயல்பாடு அப்படி தெரிந்திருக்கலாம். கட்சி எழுச்சிக்காகவே உறுப்பினர்கள் மத்தியில் பொன்னையன் அப்படி பேசினார்.

மேலும் படிக்க: சென்னையில் 9, 13 ஆகிய இரண்டு மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பாஜக கட்சியை வளர்ப்பதற்காக அண்ணாமலை அரசியல் செய்கிறார். தமிழிசைக்கு கவர்னர் பதவி கிடைத்தது போல, எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது போல அண்ணாமலையும் தனக்கு ஏதாவது பதவி கிடைக்கும் என ஆசைப்பட்டு ஏதோ அரசியல் செய்கிறார். கூட்டம் திரட்டுவது எல்லாம் பெரிய விஷயமே அல்ல. பாஜகவிற்கு கூடுவது காக்கா கூட்டம்; அதிமுகவுக்கு கூடுவது கொள்கை கூட்டம்.

தனித்த நிற்க அதிமுக தயாராக உள்ளது. யாருடனும் கூட்டணி இல்லை என்று சொல்ல ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தயார். நாளைக்கே தேர்தல் வைத்துக் கொள்ளலாம்.எல்லா கட்சியும் தனித்தே போட்டி இடுவோம். அதிமுக தயார், மற்ற கட்சியினர் தயாரா? இது என்னுடைய சொந்த கருத்து அல்ல, அதிமுகவின் கருத்து. அதிமுகவை விமர்சிக்கும் அளவுக்கு வி.பி.துரைசாமி வந்துவிட்டாரா? எங்கள் மேல் யாரும் துரும்பை வீசினால், பதிலுக்கு நாங்கள் தூணை கொண்டு எறிவோம்” என பதிலளித்தார்.

First published:

Tags: ADMK, Annamalai, BJP, Sellur Raju