ஹோம் /நியூஸ் /மதுரை /

“நீங்க எங்க போகணும்னு சொல்லுங்க.. டிக்கெட் நாங்க எடுக்குறோம்..” பேருந்தில் இலவச டிக்கெட் வழங்கிய விஜய் ரசிகர்கள்

“நீங்க எங்க போகணும்னு சொல்லுங்க.. டிக்கெட் நாங்க எடுக்குறோம்..” பேருந்தில் இலவச டிக்கெட் வழங்கிய விஜய் ரசிகர்கள்

பயணிகளுக்கு டிக்கெட் எடுக்கும் விஜய் ரசிகர்கள்

பயணிகளுக்கு டிக்கெட் எடுக்கும் விஜய் ரசிகர்கள்

Madurai News : மதுரை மாட்டுத்தாவணி முதல் ஆரப்பாளையம் செல்லும் வழித்தடத்தில் செல்லும் 2 பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இன்று (ஞாயிற்றுகிழமை)  ஒரு நாள் விஜய் ரசிகர்கள் டிக்கெட்டுகளை எடுத்து பயணிகளுக்கு வழங்கினர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

நடிகர் விஜயின் திரையுலக பயணம்  தொடங்கி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகிறது. இதனை கொண்டாடும் விதமாக தமிழகமெங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் ரசிகர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம்  சார்பாக ஆண்கள், பெண்களுக்கு இலவசமாக பேருந்தில் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அதன்படி மதுரை மாட்டுத்தாவணி முதல் ஆரப்பாளையம் செல்லும் வழித்தடத்தில் செல்லும் 2 பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இன்று (ஞாயிற்றுகிழமை)  ஒரு நாள் விஜய் ரசிகர்கள் டிக்கெட்டுகளை எடுத்து பயணிகளுக்கு வழங்கினர்.

அப்போது, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு மட்டும் இலவச டிக்கெட் வழங்கிய ஒரு நிலையில் ஆண்களுக்கும் இலவச டிக்கெட்டுகளை வழங்கி மேலும் இனிப்பு வழங்கி  உற்சாகமூட்டினர்.

First published:

Tags: Actor Vijay, Local News, Madurai