Home /News /madurai /

சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 318 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை

சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 318 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை

சுதந்திர தினம் அன்று திறந்திருந்த கடைகள்

சுதந்திர தினம் அன்று திறந்திருந்த கடைகள்

Madurai | சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 318 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது தொழிலாளர்கள் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
தேசிய விடுமுறை நாளான சுதந்திரதினத்தன்று கடைகள், நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்டவைகளில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படாமல், ஊழியர்கள் வேலை செய்ய வேண்டும் எனில் அவர்களுக்கு இரட்டிப்புச் சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்க வேண்டும். இதன் விவரத்தை தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகத்தில் விடுமுறை தினத்திற்கு ஒரு நாள் முன்பாக உரிய படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த விதிகள் முறையாக அமல் படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து நேற்று  மதுரை மண்டலம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொழிலாளர் இணை ஆணையர் வழிகாட்டுதலின்படி, மதுரை மண்டலத்துக்குட்பட்ட மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தொழிலாளர் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Also see... தந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடிய அரசுப் பள்ளி

இதில் மதுரை மாவட்டத்தில் 131 நிறுவனங்களுடன் மண்டலம் முழுவதும் 318 நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்படாமல் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Independence day, Madurai

அடுத்த செய்தி