மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய அழகர்கோயில் ஶ்ரீ கள்ளழகர் திருக்கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா இன்று (ஆக.4) தொடங்கி வரும் 14ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த பெருந்திருவிழாவிற்காக மூலஸ்தானத்திற்கு எதிரேயுள்ள தங்க கொடிமரத்தில் இன்று கருட கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக, சுந்தராஜபெருமாள், சுந்தரவல்லி தாயார் மற்றும் பூதேவி சுவாமிகள் கொடிமரம் முன்பு எழுந்தருளப்பட்டு சிறப்பு அலங்கார ஆராதனை செய்யப்பட்டு, கொடிமரத்தில் விழாவிற்கான திருக்கொடி ஏற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தினசரி காலை தங்கப்பல்லக்கிலும், இரவு அன்னம், சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்திலும் எழுந்தருளி சுவாமி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக 09ம் நாளன்று (ஆகஸ்ட் 12) காலை 06.00 மணிக்கு திருத்தேரோட்டமும், அன்று இரவு புஷ்ப பல்லாக்கும் நடைபெறுகின்றது.
இந்த தேரோட்ட விழாவில் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 10ம் நாள் தீர்த்தவாரியும், 11ம் நாளன்று உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறவுள்ளது.
Also see... கொட்டித்தீர்க்கும் கனமழை..118 அடியை எட்டிய ஆழியார் அணை
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல், பரிகார பூஜைகளுடன் பக்தர்கள் அனுமதியின்றி திருவிழா கொண்டாடப்பட்ட நிலையில், தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்புடன் தேரோட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadi, Festival, Kallazhagar, Madurai