மதுரை மாநகர் பகுதியில் உள்ள பல்வேறு ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க வந்தவர்களிடம் உதவி செய்வது போல நடித்து பணம் திருட்டு நடப்பதாக தல்லாகுளம், அண்ணாநகர், தெப்பகுளம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன.
இதனை தடுக்கும் நோக்கில் காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டதன் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை துவக்கினர்.
குருவிக்காரன் சாலையில் உள்ள ஐ.ஓ.பி வங்கி ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க வந்த மூதாட்டிக்கு ஒரு இளம்பெண் உதவி செய்வது போல் நடித்து 16,500 ரூபாய் நூதனமாக திருடியது கண்டறியப்பட்டது. இதே போல, தல்லாகுளம் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் மையத்திலும் இது போல சில நபர்களை ஏமாற்றி பணத்தை திருடியுள்ளார்.
உடனடியாக அந்த இளம் பெண்னை கைது செய்து விசாரணை செய்த போது அவர் தேனி மாவட்டம், கொண்டம்ம நாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜேஸ் கண்ணன் மனைவி மணிமேகலை (24) என்பதும், மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளில் ஏடிஎம்க்கு பணம் எடுக்க வரும் வயதானோர், விவரம் தெரியாதவர்களிடம் உதவி செய்வது போன்று நடித்து அவர்களின் ஏடிஎம் கார்டை வைத்து கொண்டு வேறொரு ஏடிஎம் கார்டை கொடுத்தனுப்பி விட்டு பின்னர் பணத்தை எடுப்பது தெரிய வந்தது.
இப்படி இதுவரை 1,30,000 ஆயிரம் ரூபாய் வரை நூதன முறையில் திருடியதும் அதைக் கொண்டு நகை உள்ளிட்டவை வாங்கியதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து இளம் பெண் மணிமேகலையை கைது செய்து சிறையிலடைத்த போலீசார், ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும்போது யாரிடமும் ரகசிய எண்ணை தெரிவிக்க வேண்டாம் என்றும், சந்தேகப்படும் படியான யாராவது ஏடிஎம்மில் நின்றால் உடனடியாக அருகில உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madurai