ஹோம் /நியூஸ் /மதுரை /

பாதாள சாக்கடை பணியின்போது மண்ணில் புதைந்து பலியான தொழிலாளி! - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

பாதாள சாக்கடை பணியின்போது மண்ணில் புதைந்து பலியான தொழிலாளி! - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

மதுரை தொழிலாளி பலி

மதுரை தொழிலாளி பலி

மதுரையில் பாதாள சாக்கடை குழாய் இணைக்கும் பணியின்போது மண் சரிவு ஏற்பட்டதால் உயிரிழந்த தொழிலாளியின் உடலை 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை கூடல் நகர் அருகே நடைபெற்ற பாதாள சாக்கடை பணியில் தொழிலாளி மண் சரிவில் சிக்கிக் கொள்ளும் பதை பதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

மதுரை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட வார்டுகளில் புதிய பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டு அதனை இணைக்கும் பணிகளானது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று காலை மதுரை கூடல் நகர் பகுதியில் உள்ள அசோக் நகர் 2 வது தெருவில் பாதாள சாக்கடை இணைப்பு பணிகளை வழக்கம் போல் ஒப்பந்த பணியாளர்கள் 3 பேர் மேற்கொண்டு வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்படவே மூன்று பேரும் மேலே ஏற முயற்சி மேற்கொண்ட நிலையில் அருகில் இருந்த காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.

இரண்டு பேர் மேலே ஏறி தப்பித்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சக்தி வேல் என்பவர் மட்டும் மாட்டிக்கொண்ட நிலையில் அவரை காப்பற்ற சக பணியாளர்கள் 2 பேர் முயற்சி செய்த நிலையில் பலனளிக்காததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 15 அடி ஆழத்திற்கு நிரம்பியிருந்த தண்ணீரை முதலில் வெளியே அகற்றினர்.

4 மணி நேர நீண்ட போராட்டத்திற்கு பின்னர்  உயிரிழந்த  சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மதுரை பாதாள சாக்கடை பணயின் போது மண் சரிந்து தொழிலாளி பலி

தொடர்ச்சியாக மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் குழாய் பதிக்கும்போது உயிரிழக்கும் சம்பவம் மதுரையில் அரங்கேறி வருவதால் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியப்போக்குடன் செயல்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் கலோன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "விசாரணை நடைபெற்று வருகிறது, விசாரணையின் அடிப்படையில் அதிகாரிகள் மீதோ அல்லது ஒப்பந்த காரர்கள் மீது தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதற்கிடையே பாதாள சாக்கடை பணியில் தொழிலாளி மண் சரிவில் சிக்கிக் கொள்ளும் பதை பதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

Published by:Lakshmanan G
First published:

Tags: Accident, Madurai