Home /News /madurai /

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பிறகும் கருவுற்ற பெண் - உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பு இதுதான்!

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பிறகும் கருவுற்ற பெண் - உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பு இதுதான்!

உயர்நீதிமன்ற மதுரை கிளை

உயர்நீதிமன்ற மதுரை கிளை

குடும்பகட்டுபாடு அறுவை சிகிச்சை செய்யும் பெண்களுக்கு, மீண்டும் கரு ஏற்படாது என  100% உத்தரவாதம் வழங்கப்படுவதில்லை என உயர்நீதி-மன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பிறகு, மீண்டும் கருவுற்றதால் இழப்பீடு கோரி புதுக்கோட்டையைச் சேர்ந்த வள்ளி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 10 லட்ச ரூபாய் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “மனுதாரர் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இருப்பினும் 2020ம் ஆண்டு கருவுற்ற நிலையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
மனுதாரருக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முறையாக செய்யப்படாததால், தற்பொழுது மற்றொரு பெண் குழந்தையை பெற்றெடுத்து உள்ளார்.

எனவே, அரசு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார். அரசு தரப்பில்,  இதுபோல் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் தவறுகள் நிகழும் பொழுது 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும். மனுதாரருக்கு அந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வழக்கை பொருத்தவரை, கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பெண்கள், மீண்டும் கருவுர மாட்டார்கள் என 100% உத்தரவாதம் வழங்கப்படுவதில்லை. குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பின்னரும் பல பெண்கள் கருவுற்று குழந்தையும் பிறந்து உள்ளது. மனுதாரர் கருவுற்றதை அறிந்ததும் தொடக்க காலத்திலேயே கருக்கலைப்பு செய்திருக்கலாம். ஆனால் மனுதாரர் அதனை தேர்வு செய்யவில்லை.

Must Read : சமையல் அறையில் விளையாடிய குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்... பாத்திரத்தில் மாட்டி கொண்ட குழந்தையின் தலை போராடி மீட்பு

ஆகவே மனுதாரர் அதற்கான இழப்பீட்டை அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் ஒட்டுமொத்த சூழ்நிலையும் கருத்தில் கொண்டு மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை, 8 வாரத்திற்குள்  தமிழக அரசு வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Published by:Suresh V
First published:

Tags: Compensation, Madurai High Court, Pregnancy

அடுத்த செய்தி