இளம் வழக்கறிஞர்களுக்கு மட்டும்.. உயர்நீதிமன்ற நீதிபதி வழங்கிய சிறப்பு சலுகை...
இளம் வழக்கறிஞர்களுக்கு மட்டும்.. உயர்நீதிமன்ற நீதிபதி வழங்கிய சிறப்பு சலுகை...
உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி G.R. சுவாமிநாதன்
High Court Judge G.R. Swaminathan | உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி G.R. சுவாமிநாதன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு வழங்கிய சலுகை பாராட்டை பெற்றுள்ளது..
பள்ளி செல்லும் சிறு குழந்தைகள் உள்ள இளம் ஆண், பெண் வழக்கறிஞர்களுக்கு மட்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி G.R.சுவாமிநாதன், சிறப்பு சலுகை வழங்கி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
வழக்கு விசாரணைக்கு வரும் நேரத்தில் , குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வர வேண்டிய சூழல் இருந்தால், நீதிமன்ற அலுவலரிடம் முன் கூட்டியே அனுமதி பெற்று, வேறு நேரத்தில் வழக்கை விசாரணைக்கு பட்டியலிடலாம் என்ற சலுகையை வழங்கி உள்ளார்.நீதிபதி G.R.சுவாமிநாதன், விசாரிக்கும் வழக்குகளுக்கு மட்டும் இது பொருந்தும். இது தொடர்பாக உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி G.R. சுவாமிநாதன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு அனுப்பிய அறிக்கை.
சில நாட்களுக்கு முன்பு நான் ஒரு வழக்கை விசாரித்த போது, ஒரு வழக்கறிஞர் பிரபு என்பவர் சற்று தயங்கிபடி , அவர் தாக்கல் செய்த வழக்கை , தயவு செய்து நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட வேண்டும் என கோரினார். என்ன காரணம் என்று வினவிய போது, தனது குழந்தையை பள்ளி கூடத்தில் இருந்து, பிற்பகல் 03.30 மணிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். எனவே மாலை 04.00 மணிக்கு இந்த வழக்கை எடுத்துக்கொள்வது தனக்கு ஒத்துவராது எனவும் அவர் கூறினார் .
இந்த சம்பவம் என்னை சிந்திக்க வைத்தது. இந்த நீதிமன்றத்தில் சிறு குழந்தையுடன் உள்ள இளம் வழக்கறிஞர்களும் வழக்கில் ஆஜராகின்றனர். அவர்களுக்கும் இதே போன்ற சிரமங்கள் இருக்கலாம். எனவே அவர்களது வேண்டுகோள்படி அவர்களது வழக்கு விசாரணை நேரத்தை மாற்ற அனுமதி வழங்குவது எனது கடமை என்று நினைக்கிறேன். எனவே, இது போன்ற சூழலில் உள்ள வழக்கறிஞர்கள் நீதிமன்ற அலுவலரிடம் முன்கூட்டியே தெரிவித்து , குறிப்பிட்ட நேரத்தை மாற்றி கேட்கலாம்.
இவர்களுக்கு ஒரு நிபந்தனை பள்ளி செல்லும் குழந்தை உள்ள இளம் ஆண், பெண் வழக்கறிஞர்கள் வழக்கு விசாரணை நேரத்தை மாற்ற விரும்புவோர், மிக நன்றாக தயார் செய்ய வேண்டும். இந்த வழக்கறிஞர்கள் ஆஜராக உள்ள வழக்கு தொடர்பான தேதிகள் மற்றும் நிகழ்வுகள், அவர்கள் சார்ந்திருக்கப் போகும் வழக்குகள், தாங்கள் முன்வைக்க விரும்பும் முன்மொழிவுகள் ஆகியவற்றை ஒரு நாள் முன்னதாக நீதிமன்ற அதிகாரியிடம் வழங்க வேண்டும்.
ஆனால் இந்தச் சலுகை தனி இளம் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு குழு வழக்கறிஞர்கள், LAW OFFICE ல் இருந்து வரும் வழக்குகளுக்கு இது பொருந்தாது. இந்த முறை நாளை முதல் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நான் விசாரிக்கும் வழக்குகளுக்கு மட்டும் பொருந்தும் இவ்வாறு , நீதிபதி G.R..சுவாமிநாதன் அறிக்கையில் கூறி உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.