Home /News /madurai /

ஆண்மை குறைபாட்டை மறைத்து திருமணம் செய்ததாக கணவர் மீது மனைவி புகார் - 420 பிரிவில் வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

ஆண்மை குறைபாட்டை மறைத்து திருமணம் செய்ததாக கணவர் மீது மனைவி புகார் - 420 பிரிவில் வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Madurai : தான் ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்த நபர் மீது IPC  417, 420 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மதுரை தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்த  உயர்நீதிமன்றம்  மதுரைக்கிளை உத்தரவு.

மதுரையை சேர்ந்த இர்பான ரஸ்வீன் என்ற பெண் உயர்நீதிமன்றம்  மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தான் ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்த நபர் மீது,  முதல் தகவல் அறிக்கையில் மேலும் உரிய  சில பிரிவுகளில் சேர்க்க கோரியிருந்தார்.

இந்த வழக்கு  நீதிபதி சிவஞானம் , முன்  விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கணவர் ஆண்மையற்றவராக இருந்ததை மறைத்து திருமணம் செய்து 200 சவரன் நகை, 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை வரதட்சணையாக பெற்றுள்ளனர்.

திருமணத்திற்கு பின்பு ஆண்மையற்றவர் என்பது தெரியவந்த நிலையில், கணவர் தலாக் முறையில் விவாகரத்து கூறிவிட்டு அமெரிக்கா சென்று விட்டார். மனுதாரரின் கணவர் மீது தவறு இருக்கும் சூழலில் அதை மறைத்து திருமணம் செய்துள்ளார்.
ஆகவே, மனுதாரர் மீது IPC 417, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் மதுரை தல்லாகுளம் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

ஐபிசி 417 பிரிவு 

ஒப்பந்தம் செய்ந்து கொண்டபடி நடக்காமல், அவரிடம் அந்த ஒப்பந்தப்படி நடந்து விட்டதாக நம்ப வைத்துக் கருத்துடன் ஏமாற்றி அவரிடமிருந்து அநியாயமாக பணம் பறிப்பது ஐபிசி 417பிரிவின் கீழ் வரும் குற்றமாகும். இவ்வாறு வஞ்சிக்கும் குற்றத்தை செய்தவருக்கு ஒர் ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தணடனை விதிக்கப்படும்.

Must Read : ‘நாடோடிகள்’ பட பாணியில் நடிகர் அஜித்துக்கு போஸ்டர்! - திருச்சி ரசிகர்கள் வெறித்தனம்.. பொதுமக்கள் வியப்பு

ஐபிசி 420

இதேபோல, ஐபிசி 420 பிரிவானது ஒருவரை ஏமாற்றி அதன்மூலம் நேர்மையின்றி தூண்டி, சொத்தைப் பிறருக்கு கொடுக்கும்படி செய்தல் அல்லது ஒரு மதிப்புள்ள காப்பீட்டை உருவாக்கும்படி அல்லது மாற்றும்படி அல்லது அளிக்கும்படி செய்தாலும் அல்லது மதிப்புள்ள காப்பீடாகக் கையெழுத்திடப்பட்டு முத்திரை இட்டுப் பயன்படுத்துவதற்கும் பொருளை அவ்வாறு உருவாக்க மாற்ற அல்லது அளிக்கத்தக்க செயல் புரியும்படி செய்தாலும் அத்தகைய வஞ்சனை புரிந்தவருக்கு 7 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்துத் தண்டனையாக விதிக்க வழிவகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published:

Tags: Crime News, Dowry, Madurai, Madurai High Court, Marriage

அடுத்த செய்தி