மதுரை புதுநத்தம் சாலையில் 114 கோடி ரூபாய் மதிப்பில் 8 தளங்களாக 2 லட்சம் சதிரடி கட்டிட பரப்பளவில் 8 மாதங்களாக கலைஞர் நினைவு நூலகத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுமான பணிகளை சிஎம்கே ப்ராஜெக்ட் (CMK Projects) என்ற ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டு வரும் நிலையில், பல வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இன்று காலை மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 25 வயது தொழிலாளி 5வது தளத்தில் Blasting பணியை மேற்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உடனடியாக அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட போது அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கே, தற்காலிகமாக கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Must Read : வடிவேலு பட பாணியில் டெஸ்ட் டிரைவ் என கூறி பைக் திருட்டு... முதியவருக்கு கிடைத்த மாலை மரியாதை
ஜனவரி மாதத்திற்குள் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு நூலகத்தை திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக, சமீபத்திய ஆய்வின் போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திட்டமிட்டிருந்த நிலையில் தொழிலாளர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Death, Madurai, Migrant workers