Home /News /madurai /

கன்னியாகுமரி டூ காஷ்மீர்.. 10,000 கி.மீ விழிப்புணர்வு பயணம் - சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மதுரை மாற்றுத்திறனாளி இளைஞர்

கன்னியாகுமரி டூ காஷ்மீர்.. 10,000 கி.மீ விழிப்புணர்வு பயணம் - சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மதுரை மாற்றுத்திறனாளி இளைஞர்

மாற்றுத்திறனாளி  இளைஞர்  குங்கும சீனிவாசன்

மாற்றுத்திறனாளி இளைஞர் குங்கும சீனிவாசன்

Madurai | செவிதிறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் முன்னேற்றமடைய வேண்டும் என்பதை வலியுறுத்தி 10,000 கி.மீ தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரையை மாற்றுத்திறனாளி இளைஞர் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியைச் சேர்ந்த செவிதிறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி இளைஞரான குங்கும சீனிவாசன், அவரைப்போல் செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் நலன் மேம்பாட்டை வலியுறுத்தும் விதமாக கன்னியாகுமாரி முதல் ஜம்மு காஷ்மீர் வரையில் இருசக்கர வாகனத்தில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். 

எம்.பி.ஏ பட்டதாரியான இவர் தன்னை போன்று உள்ள செவிதிறன் குறைபாடுடன் இருப்பவர்கள் வீட்டிலேயே முடங்கிவிடாமல் தங்களுக்குள் உள்ள திறனை தாங்களே வெளிப்படுத்தி சமூகத்தில் தங்களுக்கென தனி இடம் பிடித்து வாழ்வில் முன்னேற்றமடைய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜூலை 3ம் தேதி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை கன்னியாகுமரியில் துவங்கி கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், தெலங்கானா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 16 மாநிலங்களுக்கு 10,041 கிலோ மீட்டர் தூரத்தை  இரு சக்கர வாகனத்தில் தனியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

10,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் இருசக்கர வாகனத்தில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய முதல் செவித்தறன் குறைபாடுடைய நபர் என்ற சாதனையும், ஜம்மு காஷ்மீர் கிஸ்துவார் முதல் கிலாங்க் வரை 120 கிலோ மீட்டர் தூரம் கொண்ட உலகின் அபாயகரமான சாலையை கடந்தவர், 19,000 அடி கொண்ட உமலிங் லா மிகவும் உயரமான மலை பகுதியில் பயணித்த செவிதிறன் குறைபாடுடைய நபர் என மூன்று விதமான சாதனையை படைத்துள்ளார். அதனை பாராட்டி இந்த இளைஞருக்கு செப்டம்பர் 3ஆம் தேதி நோபல் (Nobel world records) உலக சாதனை விருது வழங்கப்பட்டது.

செவிதிறன் குறைபாட்டை குறையாக கருதி வீட்டில் முடங்காமல் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து சமூக முன்னேற்றத்தில் தங்களது பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வழி நெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், ராணுவ வீரர்கள் உள்ளிட்டோரை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக இளைஞர் குங்கும சினிவாசன் கூறுகிறார்.

மேலும் செவிதிறன் குறையுடன் எவரது உதவியும் இல்லாமல் 10,041 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டது மிகுந்த சவால் நிறைந்ததாக இருந்ததாகவும் செல்லும் வழியில் விபத்து, தட்பவெப்ப சூழல் ஒத்துழையாமை, ஆக்சிஜன் குறைபாடு போன்ற பல்வேறு சவால்கள் நிறைந்ததாக இந்த பயணம் அமைந்ததாகவும் இந்த பயணம் தன்னை போல் உள்ளவர்களுக்கு  உந்து சக்தியை கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு இருப்பதாகவும் இந்த பயணம் விழிப்புணர்வின் துவக்கம் எனவும் இன்னும் பல கட்ட விழிப்புணர்வுகளை ஏற்படுத்த உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

Also see... ஊட்டியில் தந்தை மகனை வெட்டி ரூ.52 லட்சம் கொள்ளை

உலக அளவில் அடுத்தகட்ட பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக கூறும் அவர், பயணத்தில் உள்ள ஆபத்து கருதி பாதியில் நிறுத்திவிட்டு செல்ல பலரும் தன்னை அறிவுறுத்திய நிலையில் தன்னை போன்றவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளை மட்டுமே மையமாக கொண்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்ததாகவும் கூறுகிறார். 
Published by:Vaijayanthi S
First published:

Tags: Madurai, Travel

அடுத்த செய்தி