Home /News /madurai /

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி? - திருமங்கலம் அருகே இரும்புத்துண்டில் மோதியதால் பரபரப்பு..

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி? - திருமங்கலம் அருகே இரும்புத்துண்டில் மோதியதால் பரபரப்பு..

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்ற தண்டவாளத்தில் இருந்த இரும்புதுண்டுகள்

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்ற தண்டவாளத்தில் இருந்த இரும்புதுண்டுகள்

Madurai : திருமங்கலம் அருகே ரயில் தண்டவாளத்தில் இரும்புத்துண்டு இருந்ததால் ரயிலை கவிழ்க்க சதியா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னையில் இருந்து சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் மதுரை திருமங்கலம் வழியாக விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. திருமங்கலத்தை கடந்து கள்ளிக்குடி அருகே சென்ற போது, ரயில் தண்டவாளத்தில் இருந்த இரும்பு துண்டு மீது ரயில் மோதியது. ரயில் சென்ற வேகத்தில் இரும்பு துண்டுகள் சுக்கு நூறாக நொறுங்கி பயங்கர சத்தம் கேட்டது.

    எஞ்சின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தி சத்தம் வந்த பெட்டி அருகே சென்று பார்த்தார். அப்போது அந்த பெட்டியில் படிக்கட்டுகள் உடைந்து நொறுங்கி இருந்தது. அத்துடன் நான்கு ஸ்லீப்பர் கட்டைகளும் சேதமாக இருந்தது. தண்டவாளத்தில் இரும்பு துண்டுகள் சுக்கு நூறாக நொறுங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த இன்ஜின் டிரைவர் உடனடியாக விருதுநகர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதனை அடுத்து விருதுநகர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்தனர். சோதனை செய்ததில் இரும்பு துண்டுகள் இருப்பது தெரிய வந்தது. இந்த துண்டுகள் ரயிலை கவிழ்க்க வைத்தது இரும்பு துண்டுகளா? அல்லது ரயில்வே பணியாளர்கள் பணியின் போது விட்டுச்சென்ற இரும்பு துண்டுகளா? என விசாரணை செய்து வருகின்றனர்.

    Also see... இளையராஜாவுக்கு எம் பி பதவி - பிரதமர் மோடி வாழ்த்து

    இதனால் ரயில் நின்றிருந்த தண்டவாளம் முழுவதும் சோதனை செய்த பின்னர் அரை மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. அதிர்ஷ்டவசமாக அதனைத் தொடர்ந்து வேறு எந்த ரயிலும் வராததால் விபத்துக்கள் எதுவும் நடைபெறவில்லை. தண்டவாளத்தில் இரும்பு துண்டுகள் வைத்து ரயிலை கவிழ்க்க சதி திட்ட வேலையா?  என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    செய்தியாளர்: சிவக்குமார், மதுரை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Thirumangalam, Train Accident

    அடுத்த செய்தி