Home /News /madurai /

மதுரையில் ரயில்பெட்டி மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்றபோது விபரீதம்... மின்சாரம் பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு

மதுரையில் ரயில்பெட்டி மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்றபோது விபரீதம்... மின்சாரம் பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு

செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த சிறுவன்

செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த சிறுவன்

Mudurai : மதுரை கூடல்நகர் சரக்கு ரயில் நிலைய பகுதியில் ரயில் பெட்டியின் மேல் ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற போது மின்சாரம் தாக்கிய சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

மதுரை கூடல்நகர் சரக்கு ரயில் நிலைய பகுதியில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியின் மீது ஏறி நண்பர்களுடன் செல்ஃபி எடுக்க முயன்ற விக்னேஸ்வர் என்ற சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மதுரை மீனாம்பாள்புரம் அருகே முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரின் மகனான விக்னேஸ்வர் (17) என்ற சிறுவன் 17.07.2022 (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை நாள் என்பதால் மதியம் 2 மணியளவில் தனது இரண்டு நண்பர்களுடன் கூடல்நகர் சரக்கு ரயில் நிலைய பகுதிக்கு விளையாட வந்துள்ளார்.

அப்போது கூடல் நகர் ரயில் நிலைய ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோச் எண்.14269 பயணிகள் ரயில் பெட்டியின் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக மேலே சென்று கொண்டிருந்த மின்சார வயர் மீது கை பட்டு மின்சாரம் பாய்ந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது, அங்கு பணியில் இருந்த கூடல் நகர் ரயில்வே ஊழியர் கண்ணன் என்பவர் சிறுவன் மீது மின்சாரம் தாக்கி கீழே விழுந்ததைப் பார்த்துள்ளார். அப்போது, சிறுவன் உயிருடன் இருந்ததை அறிந்த ரயில்வே ஊழியர் கண்ணன், உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.

செல்ஃபி மோகத்தால் சிறுவன் உயிரிழப்பு


Must Read : கள்ளக்குறிச்சி கலவரம்.. நீதி வேண்டி போராடியவர்கள் மீது பழியா? சீமான் கண்டனம்

அதனைத் தொடர்ந்து, இங்கு வந்த ஆம்புலன்ஸில் சிறுவனை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கே விக்னேஸ்வரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Published by:Suresh V
First published:

Tags: Madurai, Train

அடுத்த செய்தி