Home /News /madurai /

மேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை - வடமாநில கொள்ளையர்கள் அட்டூழியம்

மேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை - வடமாநில கொள்ளையர்கள் அட்டூழியம்

மேலூர் கொள்ளை சிசிடிவி வீடியோ

மேலூர் கொள்ளை சிசிடிவி வீடியோ

Madurai | வடமாநிலங்களை சேர்ந்த கொள்ளை கும்பலை சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் தேடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரை மாவட்டம் மேலூர் குமார் நகர் பகுதியைச் சேர்ந்த பிரபுசங்கர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருவதுடன் அங்கு குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.

மேலூர் குமார் நகரில் இவருக்கு சொந்தமாக உள்ள வீட்டை அவரது மாமனார் பலாகிருஷ்ணன் பராமரித்து வரும் நிலையில், வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் பின் பக்க ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்து, வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 95 பவுன் தங்க நகை, 45 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூபாய் 1.10 இலட்சத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

பிரபுசங்கரின் மாமனார் பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து கதவை திறந்து பார்த்தபோது, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து மேலூர் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆர்லியஸ் ரெபோனி, ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் காவல்துறையினரும், தடயவியல் மற்றும் கைரேகை துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அருகில் இருந்த குடியிருப்புகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் வடமாநிலங்களை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் தலையில் முகமூடி  அணிந்தபடியும், அதில் 3 பேர் கொள்ளையடிப்பதற்கு தேவையான பொருட்கள் கொண்ட பேக் அணிந்தபடி செல்வது பதிவாகி உள்ளது. இதன் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது வட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் என்பதும், இவர்கள் இப்பகுதியில் தொடர்ந்து நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகவும் விசாரணையில் ஈடுபட்டு வரும் காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்தார்..

Also see... ஏசியே வேலை செய்யவில்லை.. மூச்சு திணறுது - ரயில் பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

இதே போன்று கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி காந்திநகரில் உள்ள காவல்துறை அதிகாரி வீட்டிலும் மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பியை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதும், கடந்த மூன்று மாதத்தில் காந்திநகர், வெங்கடேஸ்வரா நகர், மற்றும் குமார் நகர் ஆகிய பகுதிகளில் இந்த வடமாநில கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு நகை மற்றும் பணத்துடன் வடமாநிலங்களுக்கு  தப்பிச் சென்று விடுவதால் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் வடமாநில கொள்ளையர்களை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய தேடுதல் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் போலீஸார் தகவல் தெரிவித்தனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Crime News, Madurai, Robbery

அடுத்த செய்தி