மதுரையில் உள்ள சுவர்களில் ஒட்டப்படும் அரசியல் மற்றும் சினிமா நடிகர்கள் குறித்தான போஸ்டர்களும், பழிக்கு பழியாக வசனங்களில் திக்குமுக்காட வைக்கும் அளவிற்கு கிராபிக்ஸ் காட்சிகள் சித்தரிக்கப்படும் போஸ்டர்களும் பெருமளவில் பேசுபொருளாவது வழக்கம்.
இந்நிலையில், மதுரை வில்லாபுரம் அருகே மீனாட்சி நகரைச் சேர்ந்த 27 வயதுடைய ஜெகன் (27) B.Sc.IT முடித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் நிலையில், மாத வருமானமாக 40 ஆயிரம் சம்பாதிப்பதுடன் சொந்தமாக நிலமும் வைத்துள்ளார்.
நான்கு ஆண்டுகளாக வரம் பார்த்தும் திருமணம் ஆகாததால், மதுரை மாநகர் புறநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுவர்களில் மணமகள் தேவை என போஸ்டர் அடித்து பெண் தேடும் படலத்தை துவங்கி உள்ளார்.
இதுகுறித்து 90ஸ் கிட்ஸ் ஜெகன் கூறுகையில், "நான் தனியார் நிறுவனத்தில் மேலாளராகவும், பகுதி நேர வேலையாக பிரியாணி கடையிலும், மாமதுரை பப்ளிசிட்டி என்ற நிறுவனத்தில் போஸ்டர் ஒட்டும் பணியையும் செய்து வருகிறேன், பல பேருக்கு போஸ்டர் அடித்து ஒட்டும் நான், எனக்காக ஒரு போஸ்டர் ஒட்ட முடிவு செய்து இதை செய்துள்ளேன். இந்த போஸ்டரை பார்த்து பல பேர் கேலி, கிண்டல் செய்து தொலைபேசியில் பேசுவார்கள், ஆனால் நான் அதை கண்டுகொள்ளவில்லை.
Also Read : ‘வருங்கால முதல்வர் விஜய்’ – கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் மதுரையை கலக்கும் போஸ்டர்
நான்கு வருடமாக பெண் பார்த்தும் வரன் ஒன்று கூட அமையவில்லை, பெண் பார்க்கும் புரோக்கர்கள் ஜாதகம் மற்றும் பணத்தை வாங்கிச் செல்வார்கள், ஆனால் ஒரு பெண்ணை கூட காண்பிக்க மாட்டார்கள், இது புரோக்கர்களுக்கு வந்த சோதனையான அல்லது 90ஸ் கிட்ஸ்களுக்கு வந்த சோதனையை என தெரியவில்லை, போஸ்டரை பார்த்து பெண்கள் தொடர்பு கொள்வார்கள் என்று பார்த்தால் , மீண்டும் பெண் புரோக்கர்களே தொடர்பு கொள்கிறார்கள்" என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
மேலும், அவருடைய நண்பர் பாசித் கூறுகையில், " பெண்கள் என் நண்பரின் படிப்பு, கல்வி, தகுதி ஆகியவை பார்த்து நிராகரித்து விடுகிறார்கள், தற்போது தான் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பெண்கள் தொடர்பு கொண்டு விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்றார்.
ஏற்கனவே 90s கிட்ஸ் வேதனை அடையும் நிலையில், 2K கிட்ஸ் திருமணம் முடித்து குழந்தைகளுடன் வலம் வந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், நூதனமுறையில் மணமகள் தேவை என்று 90s கிட்ஸ் ஜெகன் செய்துள்ள செயல் தற்பிது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செய்தியாளர் : ஹரிகிருஷ்ணன் HP
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.