மதுரைபெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள நேதாஜி சாலையில் சுமார் 70 முதல் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடத்தில் உணவகம், பழக்கடை, பெட்டிக்கடை உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு திடீரென கட்டிடம் இடிந்து விழுந்ததில், கடைகள் முழுவதும் சேதமடைந்தது. இதனால், கடை உரிமையாளர்கள் வேதனையுடன் வந்து பார்த்து சென்றனர்.
இதே போல், கடந்த 2021 ஆம்ஆண்டு டிசம்பர் மாதம், மதுரை கீழ வெளி வீதி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சரவணன் மீது சுமார் 110 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
மேலும், மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே கடந்த 2020ஆம் ஆண்டில் தீபாவளியன்று பழமையான கட்டடம் இடிந்து விழுந்து தீயணைப்புத்துறையினர் இருவர் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென 70 ஆண்டுகளுக்கு மேல் கட்டப்பட்ட கட்டிடம் சரிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும், தொடர்ந்து கட்டட விபத்துகள் தொடர்வதால், மதுரையில் உள்ள பழமையான கட்டடங்களின் நிலையை தீயணைப்புத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு கட்டட உறுதி தன்மை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.